சூரிய பகவானின் அருளை பெறுவதற்கான எளிய பரிகாரங்கள்..!?

10 Jan, 2024 | 04:51 PM
image

எம்மில் பலருக்கும் அவர்களுடைய வெற்றியில் சூரிய பகவான் சாதகமான இடத்தில் அமர்ந்து அருள் புரிந்திருப்பது தான் மூல காரணமாகும். அதாவது வெற்றி பெற்ற சாதனையாளர்களின் சுய ஜாதகத்தில் சூரிய பகவான் சுப பலனை வழங்குவதற்குரிய இடத்தில் அமர்ந்திருப்பார் அல்லது அந்த இடத்துடன் தொடர்புடையவராக இருப்பார். நவகிரகங்களில் சூரிய பகவான் தான் அனைத்துவித சுப பலன்களையும் வழங்க கூடியவர். 

அரசாங்க பணி, அரசாங்க அனுசரனையுடன் கூடிய உதவி, அரசாங்கம் சார்ந்த உதவி.. என பல விடயங்களிலும் அருள் புரிபவர் சூரிய பகவான் தான். இத்தகைய சூரிய பகவான் எம்முடைய ஜாதகத்தில் அவருடைய சொந்த நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிது.

வேறு சிலருக்கு சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் வேறு ஏதேனும் கிரகங்கள் இருந்தாலும்.. அவை சாதகமாக இருந்தால் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிட்டும்.

உடனே எம்மில் சிலர் எம்முடைய ஜாதகத்தில் சூரிய பகவான் அவருடைய சொந்த நட்சத்திரத்திலும் இல்லை. சூரிய பகவானின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் நான்கு பாதங்களில் வேறு எந்த கிரகமும் இல்லை. இப்படி இருந்தால் எங்களுக்கு சூரிய பகவானின் அருள் கிடைக்காதா? என கேட்பர். இவர்களுக்காக எம்முடைய முன்னோர்கள் பல்வேறு எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு சூரியன் மேஷத்தில் இருந்தால்.. அதாவது அஸ்வினி, பரணி ‌ நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் அமர்ந்திருந்தால் அவர்கள் 

தாமிர பாத்திரத்தை தானமாக தர வேண்டும். 

சூரியன் ரிஷபத்தில் இருந்தால்.. கோதுமையை தானமாக தர வேண்டும்.

சூரியன் மிதுனத்தில் இருந்தால்.. மயிலிறகை தானமாக தர வேண்டும்.

சூரியன் கடகத்தில் இருந்தால்.. நெய்யை தானமாக தர வேண்டும்.

சூரியன் சிம்மத்தில் இருந்தால்.. சிவாலயத்திற்கு வில்வ இலைகளை வழங்க வேண்டும்.

சூரியன் கன்னியில் இருந்தால்.. புற்றுக் கோவிலுக்கு சென்று புற்றிற்கு பால் ஊற்ற வேண்டும். அந்த ஆலயத்திற்கு அபிஷேகம் செய்யவும் பால் வழங்கலாம்.

சூரியன் துலாமில் இருந்தால்.. சிவாலயத்திற்கு அபிஷேகம் செய்ய சந்தனத்தைத் தர வேண்டும்.

சூரியன் விருச்சிகத்தில் இருந்தால்.. தாமரை மலரை வழங்க வேண்டும்.

சூரியன் தனுசில் இருந்தால்.. ஆலயத்திற்கு கோதானம் அதாவது பசுமாட்டினை தானமாக வழங்க வேண்டும். இதை வழங்குவதற்கு உங்களது பொருளாதார சக்தி தடையாக இருந்தால் 'கோமாதா போற்றி..' என்ற ஸ்லோகத்தை, பசுமாடு ஒன்றின் புகைப்படத்துடன் அச்சிட்டு சிவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

சூரியன் மகரத்தில் இருந்தால்.. ஆலயத்திற்கு மாணிக்க கல்லை கொடுப்பது சிறந்தது. மாணிக்கக்கல் விலை உயர்ந்ததாக இருக்கிறது என கருதினால் விலை குறைவாக கிடைக்கும் மாணிக்க கல்லை வாங்கி அதனை சிவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் சாற்றும் வகையில் தயாரித்து வழங்கலாம்.

சூரியன் கும்பத்தில் இருந்தால்.. மிளகை தானமாக வழங்க வேண்டும். இந்த மிளகு சிவனுக்கு நெய்வேத்தியம் செய்யும் போது பயன்படுத்தப்பட்டு அதனூடாக உங்களுக்கு பலன்களை கிடைக்கச் செய்யும்.

சூரியன் மீனத்தில் இருந்தால்.. சிவாலயத்தில் உள்ள தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு கோதுமையை உணவாக அளித்திட வேண்டும். அதாவது கோதுமை ரொட்டி, கோதுமை மாவு உருண்டை போன்றவற்றை  மீன்களுக்கு உணவாக அளிக்க வேண்டும்.

மேற்கூறிய பரிகாரங்கள் அனைத்தும் சிவாலயத்தில் தான் மேற்கொள்ள வேண்டும். இதில் தாமிர பாத்திரத்தை மட்டும் நீங்கள் ஆண்டிற்கு ஒரு முறை தானமாக வழங்கினால் போதுமானது.

மேலும் நீங்கள் செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் பிறந்த கிழமை எப்போது வருகிறதோ.. அந்த திகதியில் தானமாக வழங்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து, உங்களது வாழ்வில் வளம்.. செல்வம்.. வளர்ச்சி.. மேம்படும்.

தகவல் : முகுந்தன்

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17
news-image

உங்களுக்கு நன்மை பயக்கும் சூட்சும நட்சத்திரங்கள்

2024-09-25 18:24:41
news-image

ஆயுள் முழுவதும் ஆதரிக்கும் நட்சத்திரங்கள்...!?

2024-09-24 17:22:30
news-image

சகல ஐஸ்வரியத்தையும் வழங்கும் பிரத்யேக தீப...

2024-09-23 22:16:18
news-image

எளிய பரிகாரங்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றியை...

2024-09-23 16:55:56