யாழ்ப்­பா­ணத்­திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள "ஜனா­தி­ப­திக்கு தெரி­வி­யுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலை­யத்தை திறந்து வைக்­க­வுள்ளார்.

அத்­துடன் வலி­.வ­டக்கில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளது காணிகள் விடு­விப்புஇ விமானப் படை­யி­ன­ருக்­கான விமா­னத்­தளம் அமைப்­பது தொடர்­பான காணி சுவீக­ரிப்பு குறித்து முக்­கிய கலந்­து­ரை­யா­டல்­க­ளில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இக் கலந்­து­ரை­யா­டலில் முப்­படைத்தள­ப­தி­களும் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், வட­பி­ராந்­தி­யத்­திற்கு பொறுப்­பான முப்­படைத் தள­ப­திகள்இ யாழ்.மாவட்ட இரா­ணுவ கட்­டளை தள­பதி ஆகியோர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

வலி­.வ­டக்கில் இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்ள பொது­மக்­க­ளது காணிகள் விடு­விப்பு தொடர்­பா­கவும், பலாலி உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் விமா னப் படை­யினர் தமக்­கான தள­மொன்றை அமைப்­ப­தற்­கான காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் ஜனா­தி­பதி, முப்­படை தள­ப­திகள், மற்றும் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளர்கள் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

இந்த  முக்­கிய கலந்­து­ரை­யா­டலை அடுத்து இரா­ணு­வத்தின் 10ஆவது ரெஜிமண்ட் பொறியியல் பிரி­வி­னரின் சாத­னைகள் தொடர்­பான பரி­ச­ளிப்பு நிகழ்­வு­க­ளிலும் ஜனா­தி­பதி மற்றும் ஏனைய அதி­கா­ரிகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதனை தொடர்ந்து மு.ப. 11 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் பிர­தான வீதியில் அமைந்­துள்ள வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில், மக்கள் தமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­திக்கு தெரி­விக்கும் "ஜனா­தி­ப­திக்கு தெரி­வி­யுங்கள்" எனும் மக்கள் குறைகேள் நிலை­ய­மொன்றை திறந்து வைக்­க­வுள்ளார்.

இந்­நி­கழ்­வி­லேயே தெல்­லிப்­பழை பகு­தியில் மீள்கு­டி­ய­மர்ந்த மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டங்­களின் உறு­திப்­பத்­தி­ரங்­க­ளையும் வழங்கி வைக்­க­வுள்ளார்.

இந் நிகழ்­வுக்கு யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வட­மா­காண முத­ல­மைச்சர், வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கும் பொது­மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இதன்­ பின்னர்   நிகழ்­வு­களை நிறைவு செய்யும்   ஜனா­தி­பதி மாலை 3 மணி தொடக்கம் மாலை 3.55 மணி­வரை மீண்டும் பலாலி உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் முக்­கிய கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­ட­வுள்ளார். பின்னர் நான்கு மணிக்கு விமானம் மூலம் கொழும்­புக்கு புறப்­பட்டு செல்­ல­வுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­ப­தியின் யாழ்.விஜ­யத்தின் போது காணி விடு­விப்பு தொடர்­பான முக்­கிய அறிவிப்­புக்கள் ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்­ப­டலாம் எனவும் பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.