அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு புற்றுநோய் -வெள்ளை மாளிகையிடம் தெரிவிக்கவில்லை என சர்ச்சை

Published By: Rajeeban

10 Jan, 2024 | 03:38 PM
image

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின்தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகையிடம் தெரிவிக்காமல் மறைத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பரில்இடம்பெற்ற சத்திரசிகிச்சைகளின் பின்னர் உடல்நிலை பாதிப்படைந்ததால் அமெரிக்கபாதுகாப்புசெயலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தினை அவர் சிரேஸ்ட  அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

இதன் பின்னர் அவர் பொதுமக்களிற்கு உரிய விதத்தில் அறிவிக்காதமை குறித்து  மன்னிப்பு கோரியுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் வெள்ளை மாளிகைக்கு தனது உடல்நிலை குறித்து அறிவிக்காத விடயம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கரிசனைகளும் பைடன் நிர்வாகத்திற்குள் வெளிப்படைதன்மை குறித்த விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு செயலாளர் தொடர்ந்தும்மருத்துவமனையிலேயே இருக்கின்றார் என்பதை பென்டகன் உறுதிசெய்துள்ளது.

நேற்றே பாதுகாப்பு செயலாளர் புரொஸ்டிரேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை வெள்ளை மாளிகைக்கு தெரியப்படுத்தப்பட்டதாக தேசிய பாதுகாப்பு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து...

2025-02-19 13:22:56
news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28