ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை, மபோலை நகர சபை,     இலக்கம் 65 கல்வெட்டிய தொகுதியின் பிரதான அமைப்பாளராக வி.பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்னிலையில் அண்மையில் அமைப்பாளர் பதவிக்கான சத்திய பிரமாணத்தை பெற்றுக் கொண்டார்.

லயன்ஸ் கழகம் 306 பி2 வின் முன்னாள் தலைவரான வி.பிரகாஷ் லயன்ஸ் கழகத்தினூடாக  பல்வேறு சமூக பணிகளை நீண்ட காலமாக செய்து வந்தார்.

வத்தளையை பிறப்பிடமாக கொண்ட இவர் வத்தளை வாழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற நோக்கை கருத்திற் கொண்டு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பிரகாஷ் நற்பணி மன்றத்தை ஆரம்பித்து அதனூடாக வத்தளை பிரதேசத்தில்  பாரிய சமூக பணிகளை முன்னெடுத்து வந்தார்.

இவ்வாறான நிலையிலேயே அவர் அண்மையில் வத்தளை மாபோலை நகரசபை எல்லைக்குட்பட்ட கல்வெட்டிய தொகுதியின் 65 வது பிரிவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.