முல்லைத்தீவில் தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்ற திட்டம்!

10 Jan, 2024 | 07:47 PM
image

வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் குளத்தின்  மேலதிக நீர் வெளியேறுவதற்க்கான வழிகள் மறிக்கப்பட்டதால்  குளத்தின் நீர்  நிரம்பி  குளத்தினை அண்டிய பகுதிகளில் வசிக்கும்  மக்கள் கனமழை ஓய்ந்து பல  நாட்கள் கடந்தும்    வெள்ளத்துக்குள்  வாழ்ந்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு  வீதிகள் குளத்தின் மேலதிக  நீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்தாகவும் இதற்கான தீர்வினை உடனடியாக பெற்றுத்தருமாறும் ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தனர் . 

தேராவில் குளக்கரையினை அண்டிய 10 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேராவில் முதன்மை வீதி குளத்து  நீரினால் மூழ்கி காணப்படுவதால் வீதியால் செல்லமுடியாத நிலை காணப்படுவதுடன் கிராமத்திற்கு செல்லும் சிறு வீதிகள் பலவும்  குளத்து நீரினால் மூழ்கியுள்ளதால் அந்த  வீதிகளாலும் செல்ல முடியாத வகையில்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  

தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படுத்தப்படாத குறிப்பாக வயல் நிலங்கள் அற்ற மூங்கிலாறு, தேராவில் கிராமத்திற்கு பொதுவாக காணப்படும் ஒரு சிறிய குளம் ஆகும் இந்த குளத்தினை  மீன்பிடி நடவடிக்கைக்காகவும்  நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்காகவும் கால்நடைகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும்  வகையிலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். 

இந்த குளக்கட்டின் மேலாகவே பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதி அமைந்திருந்தது. குறித்த குளத்தின் மேலதிக நீர் வெளியேறக்கூடிய வகையில் குளக்கட்டில் பாலம் அமைக்கப்பட்டு மேலத்திக நீர் அருகிலுள்ள தேக்கங்காட்டின் ஊடாக வெளியேறி பிரமந்தனாறு  குளத்துக்கு   செல்வது வழமையாக இருந்தது. 

இவ்வாறான  நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மழை காலத்தில் குறித்த குளக்கட்டில் வாகனம் ஒன்று பழுதடைந்து வீதி தடைப்பட் டபோது  அருகில் இருந்த தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக வீதி ஒன்று  உருவாக்கப்பட்டது. 

2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த தேக்கங்காட்டு பகுதியில் இலங்கை இராணுவத்தின் 681 வது படைப்பிரிவினர் நிலைகொண்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதோடு   தேக்கங்காட்டின் ஊடாக தேக்க மரக்கன்றுகள் அகற்றப்பட்டு தற்காலிகமாக  உருவாக்கப்பட்ட வீதியே நிரந்தர பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியாக காபற்  இட்டு செப்பனிடப்பட்டுள்ளது. இந்த புனரமைப்பு பணியின் போது வீதி நிலமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டதோடு  தேராவில் குளத்தின்  மேலதிக நீர் வெளியேறுவதற்க்கான பாலம் எதுவும் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த  கன  மழையினால் ஏற்பட்ட  வெள்ளத்தினால் குளத்தின் மேலதிக நீர் வெளியேற வழியில்லாததால் குளம்   நிரம்பி அதனை அண்மித்த மக்களின் காணிகள், வீடுகள், வீதிகளுக்குள் குளத்து நீர் சென்றுள்ளதால் மக்கள் இன்று  தங்கள் அன்றாட வாழ்வினை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவும் இதற்கான தீர்வினை உடனடியாக பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்ட  நிலையில் குளத்து நீரினை வெளியேற்றுவது தொடர்பிலான  விசேட கலந்துரையாடல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் உடையார் கட்டு தெற்கு கிராம சேவையாளர் அலுவலத்தில் நேற்று (09) நடைபெற்றுள்ளது.

இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் நீர்வழங்கல்  வடிகாலமைப்பு சபை , விவசாய திணைக்களத்தினர், வனவளப்பிரிவினர் பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடி குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன் குளத்து நீரினை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் இதன்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் (08) முதல் மீண்டும் முல்லைத்தீவில் தொடர்ந்தும் மழை பெய்துவரும் நிலையில்  குளத்தின் மேலதிக  நீரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உடனடியாக  மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்க தீர்மானிக்கப்பட்டு கிராம சேவையாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து குடிநீர் பிரச்சினை சுகாதார பிரச்சினையினை உள்ளிட்டவற்றை  எதிர்கொண்ட 15 குடும்பங்கள் இவ்வாறு மூங்கிலாறு ஆராம்ப பாடசாலையில் இடைத்தங்கல் முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான நிரந்த தீர்வாக தேக்கங்காட்டின் ஊடாக அமைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பரந்தன் பிரதான வீதியில்  மக்களால் பாலம் அமைக்கப்படவில்லை  என குற்றஞ்சாட்டப்பட்ட வீதியின் குறுக்காக தற்காலிகமாக கொட்டு ஒன்று வைத்து நீரினை வெளியேற்றுவதற்கான திட்டம் ஒன்றும்  எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:36:36
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25