முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு வைத்தியக் குழு துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, துமிந்த சில்வா தொடர்ந்தும் வைத்திய சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளார்.

அவரின் மண்டையோட்டிலிருந்து உடைந்த செதில்கள் மூளையில் தங்கியுள்ளன. அதுமாத்திரமின்றி அவரது மூளையில் தோட்டாவின் துகல்கள் படிந்துள்ளன. இது அவரது உடலின் நோய் நிலைமையை அதிகரிக்கும். 

இதேவேளை துமிந்த சில்வா சாதாரணமாக நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிங்கப்பூர்  வைத்தியசாலையில் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட சுவாச உபகரணங்கள் பொருத்தப்படுதல் வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மீது துப்பாக்கிச்கிச்சூடு  நடத்தப்பட்ட  போது துமிந்த சில்வாவின் தலையில் துப்பாக்கி தோட்டா துளைத்திருந்தது. இதன் போது இவருக்கு மண்டையோட்டுப்பகுதியில்  சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் வைத்து சத்திரசிகிச்சை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.