பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (09) தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக கடமையாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, கொல்லப்பட்டதாகவும் இந்த பெண்ணை கொன்ற சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த சந்தேக நபர் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM