(நெவில் அன்தனி)
ஸிம்பாப்வேக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சய ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை ரி20 அணியின் முழுநேர தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மெத்யூஸ், தனஞ்சய ஆகிய இருவரும் கடைசியாக 2021இலேயே சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தனர்.
78 போட்டிகளில் விளையாடிய அனுபவசாலியான சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளில் 2021 மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார்.
அக்கில தனஞ்சய கடைசியாக தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் 2021 செப்டெம்பர் மாதம் விளையாடியிருந்தார்.
அவர்களைவிட சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸும் ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் ரி10 குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் ஸிம்பாப்வேக்கு எதிராக 2022 ஜனவரி மாதம் கடைசியாக விளையாடியிருந்தார்.
முன்னாள் அணித் தலைவர் சகலதுறை வீரர் தசுன் ஷானக்க, மற்றொரு முன்னாள் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
இந்த வருடம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியைக் கருத்தில்கொண்டு உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழுவினர் சிரேஷ்ட வீரர்களை குழாத்தில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் உடற்தகுதியைப் பொறுத்தே அவர் இறுதி அணியில் இடம்பெறுவது தீர்மானிக்கப்படும்.
குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாகவும் வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சலதுறை வீரர்களாகவும் மஹீஷ் தீக்ஷன, அக்கில தனஞ்சய ஆகியோர் சுழல்பந்துவீச்சாளர்களாகவும் துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகியோர் வேகப்பந்துவிச்சாளர்களாகவும் 16 வீரர்களைக் கொண்ட குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM