தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் நான்காவது பாடல் வெளியீடு

09 Jan, 2024 | 08:23 PM
image

நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் வெவ்வேறு தோற்றத்தில் நடித்திருக்கும் 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கொம்பாரி வேட்ட புலி பாரு' எனத்தொடங்கும் நான்காவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சித்தார்த்த நூனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பீரியட் காலகட்டத்திய எக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'கொம்பாரி வேட்ட புலி பாரு..' எனத்தொடங்கும் நான்காவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி தீ பாடி இருக்கிறார். மெல்லிசையுடன் கூடிய இந்த பாடலும் இணைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30