எம்மில் பலரும் கடந்த கால நெருக்கடியான சூழலின் போது அண்டை நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலக நாடுகள் என பலவற்றில் புலம்பெயர்ந்து, தங்களது வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு செழுமைப்படுத்திக் கொண்டனர். இந்தத் தருணத்தில் தற்போது எம்முடைய மண்ணிலிருக்கும் பலருக்கும் வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும்.. செட்டிலாக வேண்டும்.. என பல கனவுகள் இருக்கிறது.
வேறு சிலர்- பூர்வீக மண்ணை மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களை புறக்கணித்துவிட்டு வெளியூர்களுக்கு செல்வதை விரும்புவதில்லை.
இந்நிலையில் யாரெல்லாம் பூர்வீக மண்ணில் இருந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும், யாரெல்லாம் பூர்வீக மண்ணை விட்டு வெளியூர்.. வெளி மாகாணம்.. வெளிநாட்டிற்கு சென்று தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வர் என்பதும் எம்முடைய ஜாதகத்திலேயே இருக்கிறது.
இது தொடர்பாக எம்முடைய ஜோதிட நிபுணர்கள் பலரும் தங்களை நாடிவரும் ஜாதகர்களுக்கு பூர்வீக மண்ணில் வெற்றி பெற முடியுமா? அல்லது வெளியூர் சென்றால் தான் வாழ இயலுமா? என்பதனை எளிதாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்கிறார்கள். இது தொடர்பான சில விடயங்களை எம்முடைய முன்னோர்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதாவது உங்களுடைய ஜாதகத்தில் ஏழாமிடம், ஒன்பதாமிடம், பன்னிரண்டாமிடம் ஆகியவை வெளியூர், வெளி மாகாணம், வெளிநாடு ஆகியவற்றை குறிக்கும். உங்களுடைய லக்னாதிபதி மேற்சொன்ன மூன்று இடங்களில் அமைந்திருந்தாலோ அல்லது மூன்று இடங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ.. உங்களுடைய வெற்றி என்பது நீங்கள் இருக்கும் பூர்வீக மண்ணில் இல்லாமல் அயலக மண்ணில் தான் இருக்கும்.
உங்கள் லக்னத்தில் ஒன்பதாவது இடம் என்பது புகழை குறிக்கும். அங்கு உங்கள் லக்னாதிபதி இருந்தால்.. நீங்கள் பூர்வீக மண்ணை துறந்து அயலக மண்ணிற்கு புலம்பெயர்ந்து சென்றால் தான் உங்களுக்கு புகழும், பொருளும் கிடைக்கும்.
அதே தருணத்தில் உங்களது ஜாதகத்தில் சனி பகவான் எங்கு அமைய பெற்றிருக்கிறார் என்பதை பொருத்தும் உங்களுடைய வாழ்க்கை பூர்வுக மண்ணிலா? அல்லது அயலக மண்ணிலா? என்பதனை தெளிவாக எடுத்துரைக்க இயலும். ஏனெனில் சனி என்பது தூர தேசத்திற்கு சொந்தமானவர். அதாவது சனிபகவான் வெளிநாடு, மலைப்பிரதேசம், குளிர்ந்த பிரதேசம் ,பனிப்படைந்த பிரதேசம், தொழிற்சாலைகள் நிறைந்த இடம் ஆகியவை எல்லாம் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை.
எம்மில் சிலர் அவர்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதி ஏழு, ஒன்பது, பன்னிரண்டு ஆகிய ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தாலும்... பல்வேறு அழுத்தங்களாலும், நெருக்கடிகளாலும் பூர்வீக மண்ணை விட்டு அகலமால் அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பர். இவர்களுக்கு வளர்ச்சி என்பது இருக்காது ஒரே இடத்தில் தேங்கி, தேக்க நிலையுடன் இருப்பர்.
இவர்கள் குறைந்தபட்சம் தங்களது பூர்வீக மண்ணிலிருந்து... அவர்களுக்கு ராசியான திசையில்.. 30 கிலோமீற்றர் தொலைவிற்கு அப்பால் சென்று தொழில் நடத்தினால் லாபம் கிட்டும்.
மேலும் சனி பகவான் உங்களது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தை பார்வையிட்டாலோ அல்லது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் இருந்தாலோ அல்லது லக்னாதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டாலோ இவர்களும் பிறந்த மண்ணிலிருந்து வெளியேறி.. வெளியூர், வெளி மாகாணம், வெளிநாடு போன்ற அயலக மண்ணிற்கு சென்றால் தான் வளர்ச்சியும், புகழும் கிடைக்கும்.
தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் அவர்களுடைய ஜாதகத்தில் மேற்சொன்ன ஜாதக விதிகளுடன் உள்ளவர்களாக இருப்பர்.
தகவல் : ஜோதிலிங்கம்
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM