கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன ரொபாடிக் சத்திர சிகிச்சை

09 Jan, 2024 | 05:10 PM
image

உலகளவில்  புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைபவர்களில் நான்காம் இடத்தில் உள்ளவர்கள் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.  இந்த வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.. முழுமையான விழிப்புணர்வு இல்லாததால் பத்து சதவீதத்திற்கும் மேற்பட்ட கணைய புற்றுநோயாளிகள் இறப்பை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் வகையில் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரொபாடிக் சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய வயிற்றின் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்றுள்ள பான்கிரியாஸ் எனும் கணையம்.. நாம் சாப்பிடும் உணவை செரிமானம் அடைவதற்கான என்சைம் எனப்படும் நொதிகளையும், எம்முடைய உடலில் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இன்சுலின் எனும் ஹோர்மோனையும் உற்பத்தி செய்கிறது.

பல்வேறு தவிர்க்க வேண்டிய ஆனால் தவிர்க்காத உணவு முறைகளாலும் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளாலும் கணையத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

வயிற்று வலி, பசியின்மை, திடீரென்று உடல் எடை குறைவு, தோல் மற்றும் கண் பகுதியில் நிற மாற்றம், சிறுநீர் நிறமாற்றம், அரிப்பு, கட்டுப்படுத்த இயலாது நீரிழிவு, ஒரு கை அல்லது காலில் வலியுடன் கூடிய வீக்கம்.. போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், கணைய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அவதானிக்கலாம்.‌

பெரும்பாலானவர்களுக்கு கணைய புற்றுநோய், உடலின் வேறு உறுப்புகளில் பரவிய பிறகு தான் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை, திசு பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன், மரபணு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணையத்தின் தலைப்பகுதி, உடல் பகுதி, வால் பகுதி என மூன்று பகுதிகளிலும்  புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். உங்களுக்கு எந்தப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவதானித்து, அதற்கேற்ப சத்திர சிகிச்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, இம்யூனோ தெரபி போன்றவற்றை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ வழங்கி நிவாரணம் அளிப்பர்.

வேறு சிலருக்கு கணையத்தின் தலைப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிக்கலான சத்திர சிகிச்சையை திறந்த நிலையில் மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.

இதற்காக தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய ரொபட்டிக் சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. இத்தகைய சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு நான்கு இடங்களில் மிகச்சிறிய அளவில் துளையிட்டு, அதனூடாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, கணைய புற்றுநோய் கட்டிகளை அகற்றி, முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.‌

டொக்டர் சுவாமிநாதன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45