(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமது நாடு அணிசேரா நாட்டுக்கொள்கையை பின்பற்றுவதாக இருந்தால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஜனாதிபதி எவ்வாறு எமது கடற்படை கப்பலை அனுப்ப முடியும் என கேட்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சபாநாயகருடன் நாங்கள் கடந்த வாரம் உகண்டா நாட்டுக்கு சென்றிருந்தோம். அதேபோன்று எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இடம்பெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்கு ஜனாதியும் செல்ல இருக்கிறார்.
எமது நாட்டின் அணிசேரா நாடுகளின் கொள்கை என்ன? என கேட்கிறோம். அமெரிக்க விசுவாசமா எமது அணிசேரா கொள்கை? அமெரிக்காவின், இஸ்ரேலின் தேவைக்கு மேலும் சில நாடுகளுடன் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு எமது கடற்படையை அனுப்புவதாக இருந்தால், ஜனாதிபதி எதற்காக அணிசேரா நாடுகளின் தலைவர்கள் நாடாடில் கலந்துகொள்ள உகண்டாவுக்கு செல்ல வேண்டும்.
அதனால் எமது நாடு அணிசேரா கொள்கையை பின்பற்றும் நிலையில் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருந்து, ஹவுதிகளை அடக்குவதற்கு அமெரிக்காவின் தேவைக்காக செயற்பட்டு, கிண்டல் செய்ய வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM