(நெவில் அன்தனி)
ஜெர்மனியின் முன்னாள் கால்பந்தாட்ட விற்பனரும் அதிசிறந்த வீரருமான ஃப்ரான்ஸ் பெக்கன்போயர் தனது 78ஆவது வயதில் காலமானார்.
இந்த துயர செய்தியை ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
கால்பந்தாட்ட விளையாட்டில் இயல்பான தலைவர் என ஜேர்மனி கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அழைக்கப்படும் பெக்கன்போயர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானதாக சம்மேளம் குறிப்பிட்டது.
ஜேர்மன் கழக மட்டப் போட்டிகளிலும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலும் பெக்கன்போயர் அசத்திய தலைவராவார்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டங்களை வென்றவர் என்ற பெருமைக்குரியவர் பெக்கன்போயர்.
1974இல் உலக சம்பியனான ஜெர்மனி அணிக்கு தலைவராக விளையாடிய பெக்கன்போயர், 1990இல் சம்பியனான ஜெர்மனி அணியின் தலைமைப் பயிற்றுநராக கடமையாற்றினார்.
கழக மட்டத்தில் ஜெர்மன் புண்டேஸ்லிகா (முதல்தரம்) கால்பந்தாட்டப் போட்டிகளில் பயேர்ன் மியூனிச் கழகத்திற்காக 1966இலிருந்து 1977வரை பெக்கன்போயர் 582 போட்டிகளில் விளையாடினார்.
அக் கழகத்தில் 5 லீக் சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த பெக்கன்போயர், 3 தடவைகள் ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற அணியிலும் இடம்பெற்றார்.
அதன் பின்னர் ஹெம்பர்க் எஸ்.வி. கழகத்திற்காக விளையாடிய பெக்கன்போயர் 1982இல் கடைசித் தடவையாக புண்டேஸ்லிகா கிண்ணத்தை வென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் நியூ யோர்க் கொஸ்மஸ் கழகத்திற்காக விளையாடிய பெக்கன்போயர் அங்கு 3 தடவைகள் சொக்கர் பௌல் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அத்துடன் பிரேஸில் காலபந்தாட்ட விற்பன்னர் பேலேயுடனும் சில போட்டிகளில் பெக்கன்போயர் விளையாடியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM