இலங்கை ஜனாதிபதி பதினொருவர் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு நாள் பயிற்சி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் நாள் ஆட்டநிறைவின்போது 391 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பங்களாதேஷ் அணஜ சார்பில் தமிம் இக்பால் 136 ஒட்டங்களையும், மொமினுல் அக் 73 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சமிக கருணாரத்ன 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின் போது 7 விக்கட்டுகளை இழந்து 403 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஸ் சந்திமால் 7 ஆறு ஓட்டங்கள் மற்றும் 21 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 190 ஓட்டங்களை விளாசினார்.
மறுமுனையில் சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM