ஜனவரி முதல் வாரத்தில் 2316 டெங்கு நோயாளர்கள் பதிவு ! யாழிலேயே அதிகளவானோர் !

09 Jan, 2024 | 12:02 PM
image

இவ்வருடத்தின் ஜனவரி முதல் வாரத்தில் 2316 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் யாழ். மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  மேலும் தெரிவித்துள்ளது. 

கொழும்பு மாவட்டத்தில் 427 டெங்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 473 டெங்கு நோயார்களும் பதிவாகியுள்ளனர் . 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் 6865 பிரதேசங்கள்  பரிசோதிக்கப்பட்டு டெங்கு நுளம்புகள் பெருகும் 462 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

346 பிரதேசங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் 48 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மழையுடனான வானிலை காரணமாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு...

2025-01-21 18:41:46
news-image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பிரதேசத்தில்...

2025-01-21 18:16:48
news-image

இலங்கை - இத்தாலிக்கிடையில் இருதரப்பு விமான...

2025-01-21 17:33:12
news-image

2024 ஆம் ஆண்டில் 386 யானைகள்...

2025-01-21 17:12:31
news-image

மேற்கு கொள்கலன் முனையம் இரண்டுக்கான ஆலோசனை...

2025-01-21 17:31:50
news-image

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம்...

2025-01-21 16:49:55
news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45