(நா.தனுஜா)
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அப்படுகொலையுடன் தொடர்புடையவர்களை தாமதமின்றி பொறுப்புக்கூறச் செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது படுகொலையாளிகள் இன்னமும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, '15 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளில் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை உள்ளக ரீதியில் தீர்ப்பதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்ற போதிலும், வழக்கு விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன' என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடிவரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றைய திகதி வரை நீதி வழங்கப்படவில்லை எனவும் மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் லசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டனைகளிலிருந்து விடுபடுவதை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், அவர்களைத் தாமதமின்றி பொறுப்புக்கூறச் செய்யுமாறும் மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
'இலங்கையில் உண்மையைப் பாதுகாக்கப் போராடிய ஊடகவியலாளரும், பத்திரிகை ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு திங்கட்கிழமை (8) இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. உலகளாவிய ரீதியில் ஒடுக்கு முறைகளையும், மீறல்களையும், சிறைத் தண்டனையையும், தமது பணியைச் செய்தமைக்காக உயிரச்சுறுத்தலையும் எதிர்நோக்கியிருக்கும் ஊடகவியலாளர்களுடன் அமெரிக்கா உடன் நிற்கும். சுயாதீன ஊடகமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் ஜனநாயகத்தின் மிகமுக்கிய அங்கங்களாகும்' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM