கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை ஏதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ரோஸா என்றழைக்கப்படும் எஸ்.டி. ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் பொலிஸில் சரணடைந்த நிலையில் ,இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஸ்டோல் ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் நான்கு ரவைகளும், ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ஆறு ரவைகளும் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 20 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது