முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படும் ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்பும் இன்றி மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.
இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்கள் காணப்படுவதுடன் வீதி பாதுகாப்பற்றதாகவும் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது. இது தொடர்பில் பலதடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.
ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலை காணப்படுவதனால் குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படி அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த வீதியில் அமைந்துள்ள பாலத்தில் போக்குவரத்தில் பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்ய முடியும். ஏனைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு குறித்த வாகனம் வீதியை கடந்ததன் பின்னரே பயணம் செய்ய முடியும்.
வீதியின் இரு பக்கங்களிலும் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்படவில்லை இதனால் வாகன சாரதிகள் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM