10ஆவது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நேற்று சனிக்கிழமை (6) இந்தியாவின் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்த, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வெளிநாடு வாழ் தமிழர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மலேசியாவைச் சேர்ந்த பினாங்கு மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு, நாடாளுமன்ற உறுப்பினர் யுனேசுவரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் குமரன், குமரேசன், விஐடி துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் பங்கேற்பில் தமிழ் பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
மிக்ஜாம் புயலின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியாவில் இருந்து உதவி செய்த டத்தோ ஸ்ரீ ஹரிஹரனுக்கும், KPY பாலாவுக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.
அத்தோடு, இலங்கையைச் சேர்ந்த பிரகாஷுக்கு தமிழ் நிறுவன விருது, சிறந்த ஊடக சேவைக்கான விருது, மலேசிய தமிழ் மலரைச் சேர்ந்த நவநீதனுக்கும் விருது வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, உணவு இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட சொற்போர் எனும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
வெற்றியாளர்களுக்கு துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் செந்தில்குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM