திருமலை கிளை தெரிவு முறைகேடும், விசாரணையும் தொடர்பில் சம்பந்தனுடன் முக்கியஸ்தர்கள் சந்திப்பு; மாவைக்கு விசேட கடிதம் அனுப்பி வைப்பு

Published By: Vishnu

07 Jan, 2024 | 07:52 PM
image

ஆர்.ராம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத்தெரிவின்போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அதுதொடர்பில் நடைபெற்ற விசாரணைகள் தொடர்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிரேஷ்ட உறுப்பினரான இரா.சம்பந்தனிடத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதே அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பத்து அங்கத்தவர்கள் தமது அதிருப்தி தொடர்பிலான விபரங்களை குறிப்பிட்டு, கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, 

தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தெரிவு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படைத்தன்மையற்ற நிலைமைகள் நீடிப்பதோடு குறித்த சில அங்கத்தவர்கள் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தெரிவில் திருப்தியற்ற நிலைமைகள் காணப்படுவதாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுதத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் எழுத்துமூலமாக கோரியிருந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 17ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற விசாரணைக்குழுவின் அமர்வின்போது, அக்குழுவின் தலைவர் யோகேஸ்வரன் பங்கேற்பின்றி விசாரணைக்குழு கூடியதோடு மறுதினம் அரசியல்குழுவும் கூடிக்கலைந்திருந்தது. 

இதனையடுத்து, அச்செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தனுக்கு உரிய அறிவிப்புக்கள் செய்யப்பட்டிருக்காத நிலையில், அதுபற்றி மாவை.சோ.சேனதிராஜாவுடன் சம்பந்தன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலினை அடுத்து எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் அரசியல் குழுவைக் கூட்டி அவ்விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற விசாரணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தியற்ற நிலைமைகள் காணப்படுவதாக குறிப்பிட்டும், மாவட்டக்கிளைத்தெரிவுகள் சம்பந்தமாக தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டும் திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர்களாக உள்ள முக்கியஸ்தர்கள் குழுவொன்று கொழும்புக்கு வருகை தந்து சம்பந்தனுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. 

இந்தச் சந்திப்பின்போது, கடந்த டிசம்பர் 17ஆம் திகதி திருகோணமலை மாவட்ட கிளைத்தலைவர் குகதாசன் முன்னெடுத்து வரும் கிளைக்காரியாலத்தில் நடைபெற்ற விசாரணைக்குழுவின் அமர்வில் திருமலையைச் சேர்ந்த பலர் சாட்சியமளிக்க தயாராக இருந்தபோதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் 10 பேரே சாட்சியம் அளிப்பதற்கு இடமளிக்கப்பட்டது.

எல்லா சாட்சியாளர்களும் ச.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற திருகோணமலை கட்சி கிளைத்தெரிவுகளில் ஊழல்கள், முறைகேடுகள், குளறுபடிகள் இடம் பெற்றது பற்றி தெளிவாக எடுத்துக் கூறியதோடு இதற்கு பரிகாரமாக திருமலையில் அமைக்ப்பட்ட சகல கிளைகளும், மற்றும் மாவட்ட கிளையும் கலைக்கப்பட்டு நடுநிலை கொண்ட ஒரு குழுவின் உதவியுடன் புதிய கிளைகள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருந்தோம். 

குறித்த முறைகேடுகள் தொடர்பில் எங்கள் முடிவையே தாங்களும் (சம்பந்தனும்) கட்சித்தலைமை உள்ளிட்டவர்களிடம் வலியுறுத்தியதாக அறிகிறோம். 

ஆனால் விசாரணை குழுவினராகிய தாங்கள் குகதாசன் நடத்திவரும் காரியாலயத்துக்கு சென்று. அவர்களிடமும் விசாரணை நடாத்தியபின் பக்கசார்பான சில முடிவுகளை எடுத்திருப்பதாக கேள்வியுற்று நாம் மிகுந்த கவலை அடைகிறோம். 

தமிழரசுக் கட்சி மகாநாட்டை திருகோணமலையில் எப்படியாவது நடத்தியாக வேண்டுமென்ற பிரயத்தனத்துடன், திருமலையில் இடம்பெற்ற முறைகேடுகளை மூடிமறைக்கும் நோக்கில் மாவட்டத்திலுள்ள சகல பிரதேசக் கிளைகளையும் கலைப்பது சாத்தியமற்றது என்ற முடிவை எடுத்திருப்பது, நடந்த ஊழல்கள் முறைகேடுகள் ஆகியவற்றுக்கு பரிகாரம் காணும் வகையில் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து ஒரு சிலரை பொதுச்சபைக்கு உள்வாங்க முடிவு செய்திருப்பதாகவும் அறிகிறோம். 

அந்த புதிய ஒரு சிலரை தெரிவு செய்யும் அதிகாரத்தையும், திருகோணமலையில் ஊழல் செய்த மாவட்ட கிளையினரிடம் ஒப்படைத்திருப்பதாகவும், அறிகின்றோம்.  இது ஒரு சமூக நீதி கோட்பாட்டுக்கு ஏற்ற தீர்ப்பாகவோ, தீர்மானமாகவோ எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர்கள் தமது விசனத்தை சம்பந்தனிடத்தில் முன்வைத்துள்ளனர். 

இதனையடத்து சம்பந்தன் குறித்த விடயம் சம்பந்தமாக எதிர்வரும் அரசியல்குழு கூட்டத்தில் தான் தீவிரமான கரிசனைகளைச் செய்வதாக அறிவித்துள்ளார்.

இதேநேரம், சம்பந்தனைச் சந்தித்த குறித்த குழுவில் உள்ள பத்துபேர் கையொப்பமிட்டு மேற்படி விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அத்துடன், அக்கடிதத்தில், அமைக்கப்பட்ட விசாரணை குழு விசாரணையை மேற்கொள்ளாமலும், விசாரணை மேற்கொண்ட குழுவும் தங்கள் கடமையை உரிய விதத்தில் உரிய முறையில் ஆற்றவில்லை என நாம் கருதுவதாலும், விசாரணைக்குழு எதிர்மனுதாரர்களுக்கு சார்பாக முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுத்திருப்பதாக நாம் சந்தேகப்படுவதாலும், 

கட்சிக்குரிய அதிகாரங்களை எதிர்மனுதாரரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது பாரதூரமான குற்றம் என்பதாலும், எம்மால் முறைப்பாடு செய்யப்பட்ட எதிர்மனுதாரர் வசிக்கும் கூடாரத்தில் இருந்து கொண்டு குறித்த விசாரணைக்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது நீதிக்கு புறம்பானது. 

திருகோணமலையில் இடம் பெற்ற ஊழல்கள் முறைகேடுகள் திருத்தப்படாவிடின் கட்சியின் எதிர்காலத்துக்கு பாரிய பங்கம் ஏற்படும் என்பதாலும்,  எம்மால் சாட்சியம் அளிக்கப்பட்ட வகையில் திருகோணமலையில் இடம்பெற்ற கிளைத் தெரிவுகளில் ஊழல், மற்றும் முறைகேடுகள், குளறுபடிகள் இடம் பெற்றிருக்கிறது  என்பதை மீளவும் வலியுறுத்துகின்றோம்.

முறைகேடுகள் சீர்திருத்தப்பட வேண்டுமானால் அனைத்து கிளைகளும், மற்றும் மாவட்ட கிளையும் கலைக்கப்பட்டு, அவர்களின் பதவிகள் வறிதாக்கப்பட்டு, மீண்டும் நடுநிலை கொண்ட குழுவொன்றின் மூலம் புதிய கிளைகள் மற்றும் மாவட்டக்கிளை தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள்...

2024-05-30 02:40:48
news-image

யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி...

2024-05-30 02:36:34
news-image

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட...

2024-05-30 02:31:15
news-image

யாழ் பொது நூலகத்தின் கதையின் ஏரியும்...

2024-05-30 01:49:12
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்...

2024-05-30 01:21:30
news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51