ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஐவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்வத்துடன் தொடர்புடையதாக சந்கேகிக்கப்பட்டு குறித்த ஐந்து இராணுவ அதிகாரிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார்  கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து தாக்குதலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.