வடமாகாண ஏனைய மாகாணங்களை போன்று பொருளாதாரத்திலும் எனைய விடையங்களிலும் சமனான பார்க்கவேண்டும் என்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருக்கிறது என ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் பணிப்பாளர் நாயகம் சமன்ரத்தபிரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் சனிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெருமளவு நிதி ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதில் 11 பில்லியன் ரூபா காணப்படுகின்றது. மாவட்ட செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள் திணைக்கள பணிப்பாளர்கள் ஊடாக சேர்ந்து பயணிக்கவேண்டும். வரையறையில்லாத பிரதேச ரீதியாக அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்லுவதே இலக்காக இருக்கின்றது.
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை உருவாக்க வேண்டும் தமிழ் மக்களுக்கிடையே பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது என்று தெரியும்.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான பிரச்சணை 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாகும். இவர்களுக்கான பிரச்சனை இலகுவில் தீர்த்துவைப்பதற்காக 250 மில்லியன் ரூபாவாக்களை வழங்கவும் ஏதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்தார்.
சமூர்த்தி, அஸ்சுவச போன்ற நிதி நிவாரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்து. அதில் யாழ்ப்பாண மாவட்டம் அதிஷ்டவசமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முறைப்பாடுகள் குறைவாகத்தான் இருக்கின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பல்கலைக்கழகங்களில் சிங்கள, ஆங்கில மொழியிலான மாவணர்களை கல்விகற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு புத்திசாலிகள் அவர்களுக்கான நவீனமாயப்படும் விவசாய நலன்களையும் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்தில் மின்வலு, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தினை உருவாக்கவும் எதிர்பாக்கப்பட்டுள்ளது அதற்காக 2.2 பில்லியனை செலவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து காணிகள் இருந்து அடையாளம், ஆவணங்களை சரியாக காட்டிய 131 நபர்களது காணிகளை உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவித்துள்ளோம்.
இதில் 2,700 குடும்பங்களுக்கு இன்னும் காணிகள்,வீடுகள் இல்லாமலும் வசித்துவருகின்றனர்.
அவர்களுக்கான காணிகள், வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாகப்படும் என்றார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஒருசிலர் விடுதலையாகியுள்ளனர். சில குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் விடுதலையாகியுள்ளனர். சிலருக்கு நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு நடைபெற்று வருகின்றது. அவர்களும் மிகவிரைவில் விடுதலையாகுவார்கள்.
ஜனாதிபதி நாளாந்தம் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். வரிகள் இல்லாமல் அரசாங்கம் இல்லை.
வரிகள் இல்லாமல் அரசாங்கத்தின் செலவுகளை செலவு செய்யவேண்டும். 2100 பில்லியன் வரிச்சலுகை 2019 ஆண்டு காலப்பகுதியில் இழக்கப்பட்டது. அதன்காரணமாக நாடு பொருளாதார ரீதியாக பின்னடைவுக்கு காரணமாக இருந்ததுடன் தற்போது வரி அதிகரிப்புக்கும் காரணமாக இருக்கின்றது. அதனால் தான் வரி உயர்வும் அவசியமாக இருக்கின்றது என்றார்.
இவ் சந்திப்பில் இலங்கை சமூக விகார பணிப்பாளர் நாயகம் கீர்த்திதென்னகோவன் உடன் இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM