குருணாகல் வில்பாவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் இடம் ஒன்றைச் சுற்றிவளைப்பதற்காக குருணாகல் பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றபோது, பொலிஸாரைக் கண்டு அங்கிருந்தவர்கள் தப்பியோடிபோது பள்ளம் ஒன்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் குருணாகல் வெஹெர பிரதேசத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில், அங்கு காணப்பட்ட சட்ட விரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை சுற்றிவளைத்து 22,500 மில்லி லீற்றர் சட்ட விரோத மதுபானத்தை கைப்பற்றியதுடன் அம்பககஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடன் இருந்த மேலும் இருவர் அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM