சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்களை பணி இடைநிறுத்தி விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர் காஞ்சன!

07 Jan, 2024 | 01:32 PM
image

பணிப்புறக்கணிப்பில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சேவைகளை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு இது தொடர்பில் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்து அத்தியாவசிய சேவை என ஊழியர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே மின்சார ஊழியர்கள் விடுமுறை அல்லது மருத்துவ விடுப்பில் பணிக்கு சமுகமளிக்காமல் திட்டமிட்டு சட்ட விரோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31
news-image

அச்சகத் துறையில் நவீன தொழில்நுட்பம் அவசியம்...

2026-03-06 16:52:48
news-image

ஈரானின் 'புஷேர்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208...

2026-03-06 16:46:34
news-image

சுற்றுலா விடுதியில் நபரொருவர் உயிர்மாய்ப்பு

2026-03-06 16:51:16
news-image

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன?...

2026-03-06 16:12:39
news-image

இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை...

2026-03-06 16:54:35