(ரொபட் அன்டனி)
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் முதற்கட்ட உயர்மட்ட அமர்வுகளில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் ஜெனிவாவிலிருந்தவாறு இந்தோனேஷியா பயணமாக இருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேஷியா செல்லவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தோனேஷியா செல்கிறார்.
அமைச்சர் மங்கள சமரவீரவுடன் ஜெனிவாவில் இலங்கையின் அரச தூதுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களான கலாநிதி ஜெகான் பெரேரா, மனோ தித்தவெல ஆகியோர் ஜெனிவாவிலிருந்து இன்றைய தினம் இலங்கை திரும்புகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM