வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளொன்றை தடுத்து நிறுத்த முற்பட்டபோது, பொலிஸாரின் சைகையை மீறி, மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற நபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிலாபம் - புத்தளம் வீதியில் உள்ள ஆராச்சிக்கட்டுவ, ஹலம்பவடவன பகுதியில் நேற்று (06) இரவு 10.45 மணியளவில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளொன்றை தடுத்து நிறுத்த முற்பட்டபோது, பொலிஸாரின் சைகையை மீறி, மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற நபரை பொலிஸார் கைது செய்யச் சென்றுள்ளனர்.
அவ்வேளை, அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடியதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடித்து காயத்துக்குள்ளானவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
குறித்த பொலிஸ் அதிகாரி சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து, தப்பியோடிய நபரை தேடும் நடவடிக்கையில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM