இலங்கையின் தொழிற்துறையை மேம்படுத்தி வரும் INSEE Ecocycle

Published By: Priyatharshan

03 Mar, 2017 | 02:22 PM
image

தேசத்தின் புகழ்பெற்ற சீமெந்து உற்பத்தியாளரும் (முன்னர் ஹொல்சிம் என அனைவராலும் அறியப்பட்டது), இலங்கையின் உள்நாட்டு சந்தையில் முதன்முதலாக சூழல் நட்புறவான ‘பசுமை’ சீமெந்தினை அறிமுகம் செய்த நிறுவனமுமான INSEE சீமெந்து தொழிற்துறை கழிவுகளை மேலாண்மை செய்யும் நோக்கில் அண்மையில் INSEE Ecocycle எனும் புதுமையான முயற்சியை அங்குரார்ப்பணம் செய்து நிறுவனத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது.

INSEE குழுமத்தின் தொழிற்துறை கழிவு மேலாண்மையாக INSEE Ecocycle காணப்படுகிறது. Geocycle ஆனது ஹொல்சிம் (லங்கா) லிமிடெட்டின் ஒரு பிரிவாகும். ஹொல்சிம், Siam City சீமெந்து(லங்கா) லிமிடெட் ஆக மாறிய சந்தர்ப்பத்தில் Geocycle ஆனது INSEE Ecocycle ஆக தனது வர்த்தகநாமத்தை மாற்றிக்கொண்டது.

இலங்கையில் கழிவு மேலாண்மை துறையில் முன்னோடியான Insee Ecocycle, 400 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முதன்மை தீர்வு வழங்குநராக உள்ளதுடன்ரூபவ் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக 500,000 மெட்ரிக் டொன் இற்கும் மேலான தொழிற்துறை கழிவுகளை அகற்றியுள்ளது.

இந்த செயற்பாடுகள் புத்தளத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் பிரதான சீமெந்து தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. INSEE Ecocycle அங்குரார்ப்பணத்தின் போது கருத்து தெரிவித்த INSEE Ecocycle இன் பொது முகாமையாளர் சன்ஜீவ சூளக்குமார,

“முன்னணி சுற்றுச்சூழல் முறைமையின் அபிவிருத்தியில் Siam City சீமெந்து குழுமத்தின் உறுதியூடாக INSEE Ecocycle பயனடைகிறது. INSEE குழுமத்தின் அங்கத்துவம் ஊடாக, சூழல் சார்ந்த நேர்மறையான எதிர்காலம் மற்றும் பாதுகாப்பினை உருவாக்குவதற்காக எம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். INSEE Ecocycle அங்குரார்ப்பணத்துடன் நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

INSEE Ecocycle இன் மாற்றமானது சூழல் பாதுகாப்பு மட்டுமன்றி, சுகாதார நலன்களையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. சிறப்பான எதிர்காலத்திற்கு தேவையான நிலையான மாற்றத்தை INSEE சீமெந்து முன்னெடுத்து வருகிறது” என்றார்.

INSEE Ecocycle ஆனது, அதன் வாடிக்கையாளர் நன்மதிப்பை பாதுகாப்பதனூடாக, மதிப்பு மற்றும் நம்பிக்கையை பெற்று உண்மையான கூட்டு பங்காண்மை ஊடாக நிலையான கழிவு தீர்வுகள் தொடர்பான சிறந்த செயல்முறைகளை வழங்கி வருகிறது. INSEE Ecocycle சேவை செயற்திறன் ஊடாக, அரச முகவர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து செயற்படும் அதன் வாடிக்கையாளர்களின் நிலையான குறிக்கோள்களுக்கு பாதுகாப்பான சூழல் தீர்வுகளை வழங்கி வருகிறது.

கழிவு மேலாண்மை சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய சூழல் பொறுப்புணர்வு விருதுகள், The Global Dialogue தொடர்பான சர்வதேச கழிவு மாநாடு மற்றும் நிலையான சூழலுக்கான The Green Hat CEO’s பேரவை போன்ற பல்வேறு முயற்சிகளை வெற்றிகரமாக INSEE Ecocycle முன்னெடுத்துள்ளது.

உற்பத்தி துறையில் இலங்கையின் பெருமைக்குரிய விருதான தேசிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விருதுகள் விழாவின் ஏக தொழில்நுட்ப பங்காளராக INSEE சீமெந்து திகழ்கிறது. 1969ம் ஆண்டு தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்காசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City சீமெந்து நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமாக INSEE சீமெந்து திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் மூலமாக INSEE வர்த்தகநாம சீமெந்து நிர்மாண மூலப்பொருட்கள் மற்றும் தீர்வுகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் அவை கம்போடியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தில் சந்தை முன்னோடியாக இந்த வர்த்தகநாமம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் ட்ரவல்ஸ் அதன் பயணச்...

2025-01-29 15:21:43
news-image

30 ஆண்டு நம்பிக்கையைக் கொண்டாடும் Maliban...

2025-01-29 10:01:31