மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த புரட்சியாளர் அமரர் அருள்சாமி

06 Jan, 2024 | 08:53 PM
image

மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்த புரட்சியாளர் அமரர் அருள்சாமி தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் ஆவார். இன்று (06) அவரது ஐந்தாவது ஆண்டு சிரார்த்த தினமாகும்.

அமரர் அருள்சாமி மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் மலையக மக்களின் மாற்றத்துக்காக கல்வி ஒன்றினாலேயே புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையில் கல்வித் துறைக்கும் தொழிற்சங்க துறைக்கும் எண்ணிலடங்கா சேவைகள் ஆற்றியவர்.

மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் பாசறையில் வளர்ந்த அருள்சாமி, பல தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டவர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்னின்று செயல்பட்டவர்.

மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய புலமையை பெற்றிருந்தவர். தொழிற்சங்க போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய செயல் வீரர் எனலாம்.

மத்திய மாகாணத்தில் 1988ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அடுத்து வந்த மாகாண சபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக பணி புரிந்தவர். இக்காலத்தில் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர் அருள்சாமி.

காத்திருப்பு பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவராக அங்கம் வகித்தவர். இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் 2018ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வின் போது தன்னை முழுமையாக அர்ப்பணித்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க பாடுபட்டவர்.

கலை, கலாசார ரீதியாகவும், சமூக மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்பட்டு வந்தவர் ஆவார்.

இ.தொ.காவின் வளர்ச்சியில் அருள்சாமிக்கு பெரும்பங்கு உண்டு. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அஹிம்சை வழியில் அமைதியாக போராடினால் வெற்றி கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டியவர் அமரர் அருள்சாமி.

தொழிற்சங்கத்துறையில் மனிதருள் மாணிக்கமாக அமரர் அருள்சாமி விளங்குகிறார். அவர் மறைந்து ஐந்து வருடங்கள் கடந்தாலும், அன்னார் அனைத்து மலையக மக்களின் உள்ளங்களில் என்றுமே வீற்றிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்­கை மெல்­லிசை மன்னர், இசை­ய­மைப்­பாளர் எம்.பர­மேஸின்...

2024-05-29 14:30:06
news-image

வெள்ளவத்தையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு...

2024-05-28 15:09:42
news-image

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகம்

2024-05-28 15:18:33
news-image

புனித மரியாள் பழைய மாணவர் சங்க...

2024-05-28 11:25:21
news-image

பேராசிரியர் சி.பத்மநாதனின் 'ஆதிகால யாழ்ப்பாணம்' நூல்...

2024-05-29 13:36:14
news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34