இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மன்னாருக்கு தென்கிழக்குப் பகுதியில் குறித்த 5 இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்ததுடன் அவர்கள் பயணித்த மீன்பிடிப்படகையும் கைப்பற்றினர்.

கைதுசெய்த 5 இந்திய மீனவர்களையும் படகையும் மன்னார் மாவட்ட மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.