(நா.தனுஜா)
மின்சாரசபை மறுசீரமை;பபு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளின் செயற்திறனையும், நிலைபேறானதன்மையையும் உறுதிசெய்யக்கூடியவகையில் அவை முழுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத், இச்சட்டமூலத்தில் காணப்படும் கரிசனைக்குரிய விடயங்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உத்தேச மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இச்சட்டமூலம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத்தினால் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் மின்சாரத்துறை மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பில் நிலவும் கரிசனைகள் குறித்து உங்களது கவனத்துக்குக்கொண்டுவர விரும்புகின்றேன். இலங்கையின் மின்சாரத்துறையானது செயற்திறனை மேம்படுத்தல், போட்டித்தன்மையை ஊக்குவித்தல், செலவினங்களைக் குறைத்தல், தூய எரிபொருள் மூலங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை இலக்காகக்கொண்டு 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மறுசீரமைப்புக்களுக்கு உள்ளாகிவருகின்றது. இந்த நிலைமாற்றத்தின் மைல்கல் அடைவானது அண்மையில் மின்சாரத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியபோது அடையப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கம் இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பதும், அதன் சேவை வழங்கலுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பதுமேயாகும்.
இருப்பினும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ள மின்சாரத்துறை மறுசீரமைப்பு முன்மொழிவுகள் முழுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதும், அவை பொருளாதார, அபாய மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆய்வு முடிவுகளுக்கு அமைவாகக் காணப்படுவதும் இன்றியமையாததாகும். மின்சாரத்துறை போன்ற மிகமுக்கியமானதொரு துறையில் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருக்கும் மறுசீரமைப்புக்களினால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் தாக்கங்களை அறிந்துகொள்வதற்கு அது உதவும். ஆகவே இத்துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புக்களின் செயற்திறன் மற்றும் நிலைபேறானதன்மை என்பவற்றை உறுதிசெய்வதற்கு முழுமையானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான ஆய்வை முன்னெடுப்பது அவசியமாகும்.
அதன்படி, தற்போது முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் முக்கிய கரிசனைக்குரிய சில விடயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. மின்சாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்படக்கூடிய மட்டுமீறிய (சமனற்ற) அதிகாரங்கள், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம் ஆகிய இரண்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ள இலக்குகளில் காணப்படும் குறிப்பிடத்தக்களவிலான வேறுபாடுகள், உரிய கட்டமைப்புக்களுக்கான நபர்களைத் தெரிவுசெய்து நியமிக்கும் செயன்முறையில் போதிய வெளிப்படைத்தன்மையின்மை, அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் இடமளிக்கக்கூடியவகையிலான மறுசீரமைப்பு காலம், இச்சட்டமூலம் நாட்டின் ஏனைய சில சட்டங்களுடன் ஒருங்கிணையாமை, இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான சொத்துக்கள் கைமாற்றப்படல், நிர்வாகக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படல், பாவனையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சரத்துக்கள் இன்மை போன்றன அக்கரிசனைகளில் உள்ளடங்குகின்றன.
எனவே, மின்சாரத்துறை மறுசீரமைப்பின் செயற்திறனை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி இவ்விடயங்கள் தொடர்பில் விசேட கவனம்செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM