இன்றைய சூழலில் அரசாங்க பணி என்பது மிகவும் கடினமானது. இதன் காரணமாக எம்மில் பெரும்பான்மையானோர் தனியார் நிறுவனத்திலோ அல்லது தொழில் துறையிலோ அல்லது ஏதேனும் ஒரு சுய தொழிலை செய்தோ தங்களுடைய வருவாயை ஈட்டுகிறார்கள். மாத ஊதியம் என்பது பணி பாதுகாப்புடன் கூடிய. நிதானமான முன்னேற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தொழில் துறையில் இது போன்ற பொருளாதார பாதுகாப்பு என்பது இருக்காது. மக்களின் தேவைகளும், ரசனைகளும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருப்பவை. இதன் காரணமாக நுகர்வோர்களான மக்களை மனதில் வைத்து தான் தொழில்களைத் தொடங்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருந்த சில உற்பத்தி பொருள்கள்... மாறிவரும் காலகட்டத்தில் அவசியமற்றவையாக இருக்கக்கூடும். இதனால் தொழில் துறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சுய தொழிலில் ஈடுபடுபவர்கள்.. மக்களின் இன்றைய தேவைகளைக் குறித்தும், மக்களின் எதிர்கால தேவைகளை குறித்தும் நன்றாக சிந்தித்துத் தொழிலை மேற்கொள்ள வேண்டும்.
எம்மில் சிலர் வங்கிகளில் கடன் கிடைக்கிறது அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நல நிதி கிடைக்கிறது என்பதற்காக அவசர கோலத்தில் சிறிய அளவிலான வணிக நிறுவனங்களை தொடங்கி, தொழிலில் ஈடுபடுவர். இவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு லாபம் கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு, தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் மனதளவில் சோர்வடைவர். அதன் பிறகு தான் என்ன செய்வது? என்பது குறித்து யோசிப்பர்.
இதன் காரணமாகத்தான் எம்முடைய முன்னோர்கள் தொழில் துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு, அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்கு ஆலய வழிபாட்டு பரிகாரம் ஒன்றையும், இறை வழிபாட்டு பரிகாரம் ஒன்றையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
பொதுவாக ஒருவர் தொழிலில் மேம்பாடு அடைய வேண்டும் என்றால் அல்லது தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் சனி பகவான் வலுத்திருக்க வேண்டும் அல்லது சூரியன் ஆட்சி, உச்சம் என வலிமை பெற்றிருக்க வேண்டும். இவர்களால் தான் தொழில் துறையில் சிறப்பாக ஈடுபட்டு, கடினமாக உழைத்து முன்னேற இயலும். சிலருக்கு சனி பகவான் அல்லது சூரிய பகவான் என இருவரில் ஒருவர் வலிமை அதிகமாகவும், ஒருவர் வலிமை குறைவாகவும் இருந்தால்.. அவர் ஈடுபட்டிருக்கும் தொழிலில் தொடர்ந்து பாடுபடாமல்.. தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்.
இந்நிலையில் சிறிய அளவில் ஜாதகம் குறித்து கவலைப்படாமல், உழைப்பை மட்டுமே நம்பி.. அதனை முதலீடு செய்து தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களது தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை என கருதப்படும் பைரவரை தொடர்ந்து வழிபட வேண்டும். பைரவரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை அஷ்டமி திதி ஆகிய நாட்களில் வணங்க வேண்டும். இதன் போது பைரவருக்கு நல்லெண்ணையால் அபிஷேகம் செய்தோ அல்லது நல்லெண்ணெய் மற்றும் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். செவ்வரளி பூக்களால் மாலை செய்து அணிவிக்க வேண்டும். இவரை தொடர்ந்து வணங்கும்போது உங்களது தொழிலின் ஏற்பட்டிருக்கும் சூட்சமமான தடைகள் அகன்று தொழில் செழிக்கும்.
வேறு சிலருக்கு இத்தகைய பரிகாரத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு லாபம் என்பது எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை என்றால்.. தமிழகத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அமைந்திருக்கும் பொங்கு சனீஸ்வர பகவானை சனிக்கிழமைகளில் அல்லது உங்களது ஜாதகத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கும் நட்சத்திர தினத்தன்று வருகை தந்து, மனதார பிரார்த்தித்தால் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தடை அகன்று லாபம் உண்டாகும்.
இந்த இரண்டு பரிகாரங்களையும் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு.. தொழிலில் மேன்மை அடைந்து நிரந்தர தொழிலதிபராக வாழ்க்கையில் உயர்வை அடைவர்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM