அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Vishnu

05 Jan, 2024 | 05:07 PM
image

அருள்நிதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தில் இடம்பெற்ற 'நரக மேளங்கள்..' எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்டி காலனி 2'. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜானோ  காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். திகில் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரித்து வழங்குகிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் இடம்பெறும் 'நரக மேளங்கள்..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான சாம் சி எஸ் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் 2015 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தின் முதல் பாகத்தை நினைவு கூறும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்