'கேப்டன் மில்லர்' படத்தின் உச்சகட்ட காட்சி அனைவருக்கும் பிடிக்கும் - தனுஷ்

Published By: Vishnu

05 Jan, 2024 | 04:54 PM
image

'கேப்டன் மில்லர் படத்தின் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் முப்பது நிமிடங்கள் அனைவருக்கும் பிடிக்கும்' என அப்படத்தின் நாயகன் தனுஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் தனுஷ், சிவ. ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்,  செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை  விளம்பரப்படுத்தும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

 இதில் பங்கு பற்றி நடிகர் தனுஷ் பேசுகையில், '' இயக்குநர் அருண் மாதேஷ் எம்மை சந்தித்து இப்படத்தின் கதையை கூறினார். அவரிடம் இதனை திரையில் காட்சியாக சாத்தியமாக இயலுமா? என கேட்டேன். அவர் உறுதியுடன் செய்ய இயலும் என்றார். அப்போது முழுமையான நம்பிக்கை வரவில்லை. ஆனால் படத்தை பார்த்த பிறகு அதன் அர்த்தம் புரிகிறது.

அவர் தன்னுடைய கடின உழைப்பை வழங்கி மிரட்டி இருக்கிறார். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் முப்பது நிமிடங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தின் பெயருடன் :மரியாதை தான் சுதந்திரம்' என்ற வாசகத்தை இடம் பெறச் செய்திருக்கிறோம். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது? எதை செய்தாலும்.. எதைச் சொன்னாலும்.. குறை கூற ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. அது ஏன் என்று புரியவில்லை. ஆனால் அது ஒரு சிறிய கூட்டம். அதை செய்து கொண்டு தான் இருக்கிறது. நாம் அதைப் பற்றி கவலைப்படாமல், நமது வேலையை தொடர்வோம். கேப்டன் மில்லர் உலக தரத்திலான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்'' என்றார்.

 தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12-ம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடகர் அறிவு எழுதி, பாடி, இசையமைத்திருக்கும்...

2024-07-19 17:36:22
news-image

மாரி செல்வராஜின் பறவை- முத்தம்- 'வாழை'

2024-07-19 17:37:34
news-image

ஹிப் ஹொப் தமிழா ஆதி நடிக்கும்...

2024-07-19 17:37:47
news-image

தீபாவளிக்கு வெளியாகும் சிவ கார்த்திகேயனின் 'அமரன்'

2024-07-19 17:38:29
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில்...

2024-07-19 16:08:59
news-image

மெய்யழகன்' கார்த்தியின் சந்தை மதிப்பை உயர்த்துமா..!?

2024-07-19 16:16:10
news-image

கிறாபிக்ஸ் காட்சிகளுடன் அசத்தும் 'சதுர்'

2024-07-19 16:17:08
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய நடிகர் காளி வெங்கட்டின்...

2024-07-19 16:17:47
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- சூரி...

2024-07-17 17:00:23
news-image

தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவம்...

2024-07-17 16:53:47
news-image

தூய்மை பணியாளர்களின் உணர்வெழுச்சியை பேசும் ''நாற்கர...

2024-07-17 16:26:31
news-image

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'றெக்கை முளைத்தேன்'...

2024-07-17 16:17:14