தம்புள்ளை - கலேவல பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சில கைப்பற்றபட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை இன்று தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.