இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி தற்­போது இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் அணி­யு­ட­னான பயிற்சிப் போட்­டியில் விளை­யா­டி­வ­ரு­கி­றது.

இரண்டு நாட்கள் கொண்ட இந் தப் போட்டி நேற்று மொறட்­டுவை மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது. இதில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணி, பங்­க­ளாதேஷ் அணியை முதலில் துடுப்­பெ­டுத்­தாட பணித்­தது.

அதன்­படி தமீம் இக்பால் மற்றும் சௌமியா ஷர்கார் ஜோடி ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கி­யது. 

இதில் ஷர்கார் 9 ஓட்­டங்­க­ளுடன் சம­ர­கோனின் பந்­து­வீச்சில் ஆட்­ட­மி­ழந்தார். அதைத் தொடர்ந்து தமீ­முடன் ஜோடி சேர்ந்த மொமினுல் நிதா­ன­மாக ஆடி 73 ஓட்­டங்­களைப் பெற்று ரிடையர் அவுட் முறையில் வெளி­யே­றினார். 

தொடர்ந்து அபா­ர­மாக ஆடி வந்த தமிம் இக்­பாலும் 136 ஓட்­டங்­களைப் பெற்று ரிடையர் அவுட் முறையில் பெவி­லியன் திரும்­பினார்.

ஏனைய வீரர்­க­ளான ஷகிப் (30), மொஹ­ம­துல்லா (43), அணித் தலைவர் ரஹீம் (21) என ஆட்­ட­மி­ழக்க பங்­க­ளாதேஷ் அணி நேற்­றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 391 ஓட்­டங்­களைப் பெற்றுக் கொண்­டு ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் இன்றை ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணி 33 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

களத்தில் டினேஷ் சந்திமல் 4 ஓட்டங்களுடனும் ரெஷேன் சில்வா 7 ஓட்டங்களுடனும்  களத்திலுள்ளனர். இன்று போட்­டியின் கடைசி நாள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.