மாபிடிகம பகுதியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 3 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபர் இரு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில்  அங்கொட மற்றும் அதுருகிரிய பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.