(நா.தனுஜா)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட சந்தோஷ் ஜாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (4) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் வழமையாக நடைபெறுகின்ற மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இது அமைந்ததாகவும், தமிழர் விவகாரம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கரிசனைகள் போன்ற ஆழமான விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அதேவேளை இருநாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக நிலவிவரும் மிக ஆழமான தொடர்புகள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று இலங்கை - இந்தியா இணைந்து பல்வேறு துறைகள் சார்ந்து முன்னெடுத்துவரும் திட்டங்கள் பற்றியும், அவற்றைப் பலப்படுத்துவது குறித்தும் தாம் இருவரும் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM