சரத்குமார், ரகுமான், அதர்வா என மூன்று நட்சத்திர நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'நிறங்கள் மூன்று' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
'துருவங்கள் பதினாறு', 'மாஃபியா சாப்டர் 1', 'மாறன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.
இதில் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், அதர்வா, ரகுமான், நிக்கி கல்ராணி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.
வித்தியாசமான த்ரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கே. கருணா மூர்த்தி தயாரித்திருக்கிறார்.
இப்படம் உருவாகி வெளியீட்டுக்காக காத்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. 'மேகம் போலாகி..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியை தாமரை எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாயின் மயக்கும் இசையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் இணைய தலைமுறையினரைக் கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM