வாழ்க்கையில் மாயாஜால வித்தையை நிகழ்த்தும் புதிய எண் கணிதம்

04 Jan, 2024 | 04:03 PM
image

இன்றைய திகதியில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை தெரிவு செய்வர். சிலர் பாரம்பரிய ஜோதிட முறையையோ அல்லது டி.என்.ஏ ஜோதிட முறையையோ அல்லது வாழ்வியல் ஜோதிட பரிகார முறையையோ என எதையாவது ஒன்றை உறுதியாகப் பின்பற்றி, தங்களது வெற்றியை தொடர்ந்து உறுதிப்படுத்திக்கொள்வர். 

இந்நிலையில், சிலர் தங்களது வெற்றியை எண் கணிதம் என்ற சோதிட முறையிலும் அமைத்துக்கொள்கிறார்கள். இத்தகைய ஜோதிடத்தை பலரும் விரும்புவதற்கு முதன்மையான காரணம். பிறந்த நேரத்தை துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதுதான்.

பிறந்தவுடன் எம்முடைய பெற்றோர்கள் எமக்கு ஒரு பெயரினை சூட்டுவர்.‌ அந்தப் பெயர் தான் நம் அடையாளமாக ஆயுள் முழுவதும் தொடர்ந்து வரும். இதனால் எண் கணித ஜோதிடம் எம்முடைய பெயரை முதன்மையாக ஆய்வு செய்கிறது. பிறந்த நாள், பிறந்த கிழமை, பிறந்த ஆண்டு, பெயர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து எம்முடைய வெற்றிகளை தீர்மானிப்பதற்கான சூட்சம ஆற்றல் கொண்ட எண்களை அடிப்படையாக கொண்டு, பெயரினை சூட்டுவர் அல்லது மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.‌ இவை பெரும்பாலும் வெற்றியை தருகிறது.

இந்நிலையில், எண் கணித ஜோதிடத்தில் தற்போது 'அடி முடி எண்' என்றொரு புதிய முறை அறிமுகமாகி, மக்களிடம் வரவேற்பை பெறத் தொடங்கியிருக்கிறது. அடி முடி எண் என்பது புதிதல்ல. எம்முடைய பெயரின் முதல் ஆங்கில எழுத்தையும், எம்முடைய பெயரின் இறுதி ஆங்கில எழுத்தையும் தெரிவு செய்து, அதனை அதற்குரிய எண்களால் கூட்டி, வரும் பலன்களை சொல்வதுதான் அடி முடி எண் கணித ஜோதிடம். 

இந்த முறையில் உங்களுடைய பெயரின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் கூட்டினால், அவை எட்டு அல்லது நான்கு என கூட்டு தொகையை காட்டக்கூடாது. நான்கு அல்லது எட்டு என்ற கூட்டுத் தொகையை காட்டினால், அவர்களால் ஆயுள் முழுவதும் தொடர்ந்து வெற்றிகளை எட்ட இயலாது.

உதாரணத்துக்கு, 'சாந்தி' என்ற பெயரில் முதல் எழுத்து 'எஸ்', இறுதி எழுத்து 'ஐ' இவை இரண்டையும் கூட்டினால், 4 வரும். இதனால் இவரது வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கை முழுமையான மகிழ்ச்சியாக இருக்காது. அதேபோல் ஆண்களுக்கும் நான்கு அல்லது எட்டு என்ற எண்களின் அடிப்படையில் முதல் எழுத்தும், இறுதி எழுத்தும் அமைந்தால், அவர்களுடைய வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையாது.

இதன் காரணமாக உங்களது பெயரின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் கணக்கிட்டு, அவை நான்கு, எட்டு என்ற எண்களாக இருந்தால், அருகிலுள்ள எண் கணித சோதிடரை சந்தித்து உங்களது பெயரை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்கு ஆயுள் முழுவதும் வெற்றி தொடரும்.

இந்த அடி முடி எண் என்பது கணவன் - மனைவி இடையேயான திருமண பொருத்தத்துக்கும், அவர்களது திருமண வாழ்க்கைக்கும் ஏற்றது என்பதால், மண - மன பொருத்தத்தை பார்க்கும் முன்னர் அவர்களின் பெயர்களில் உள்ள 'அடி முடி எண்' பொருத்தத்தையும் பார்ப்பது அவசியம்.

தகவல் : ராஜா

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17
news-image

உங்களுக்கு நன்மை பயக்கும் சூட்சும நட்சத்திரங்கள்

2024-09-25 18:24:41
news-image

ஆயுள் முழுவதும் ஆதரிக்கும் நட்சத்திரங்கள்...!?

2024-09-24 17:22:30
news-image

சகல ஐஸ்வரியத்தையும் வழங்கும் பிரத்யேக தீப...

2024-09-23 22:16:18
news-image

எளிய பரிகாரங்கள் மூலம் வாழ்க்கையில் வெற்றியை...

2024-09-23 16:55:56