வற் வரி அதிகரிப்பால் அரசாங்கம் கல்வியை அழிக்க விரும்புகிறதா? - இலங்கை ஆசிரியர் சங்கம் 

03 Jan, 2024 | 09:23 PM
image

புத்தாண்டு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைபடும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (2)  ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறைக்கு வரி விதிக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளாது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வலியுறுத்தினார்.

இதன்போது அவர் கூறுகையில், 

தற்போது பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்.

பெற்றோருக்கு சமையல் எரிவாயுவிலிருந்து கொள்வனவு செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 18 வீத வரியை விதித்து பிள்ளைகளின் அப்பியாசப் கொப்பிகள் முதல் அனைத்திற்கும் 18 வீத வரியை விதித்து பாதணி, முதல் புத்தகப் பை வரை வரியை விதித்து போக்குவரத்திற்கும் கட்டணத்தை அதிகரித்த பின்னர் எப்படி வாழ்வது?

அரசாங்கத்திற்கு கல்வி அமைப்பை நடத்த விரும்புகிறதா? அல்லாவிடின் இந்த நாட்டின் கல்வி முறைமையில் சாதகமற்ற நிலையிலுள்ள, எதுவும் இயலாத பிள்ளைகளின் கல்வியை அழிக்க விரும்புகிறதா?

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வற் வரி திருத்தத்துக்கு அமைய 15 சதவீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி அதிகரிப்பு பொருந்தும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பிள்ளைக்கு தலா 100 ரூபாய் ஒதுக்கி மேற்கொள்ளப்படும் ஊட்டச்சத்து திட்டத்துக்கு வற் வரியை உயர்த்தியதால் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 13:13:33
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 13:09:58
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 10:35:19
news-image

காணாமல் போன மூதாட்டியை வீட்டில் ஒப்படைத்த...

2024-04-23 10:52:54