2024 ஜனவரி மாத ராசி பலன்கள்

03 Jan, 2024 | 06:00 PM
image

மேஷம்

வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளவென்று செயற்படும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குரு ராசிநாதன் செவ்வாயை பார்ப்பதும், லாபச் சனி உங்களின் ராசியைப் பார்ப்பதும் உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் ஆதாயத்தையும் பெற்றுத் தரும். 

எதையும் யோசித்து செயற்படும் உங்களின் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் வராதபடி செயற்படுவீர்கள். சொந்தக் காரியங்களுக்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். இராணுவம், காவல் பணிகளில் சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். 

கலைத்துறையினர் புதிய தொழில்நுட்ப கல்வி மூலம் புதிய நிகழ்ச்சிகளை செய்து ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். வெளிநாடு செல்ல எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எதிலும் கவனத்துடன் செயற்படுவது நல்லது. உங்களின் முக்கிய காரியங்களை தள்ளிப்போடாமல் உடனே செயற்படுவது நல்லது. பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

07-01-2024 ஞாயிறு பகல் 07.46 முதல் 09.01.2024 செவ்வாய் இரவு 08.18 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், மஞ்சள், நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து, மிளகு கட்டி நெய்த் தீபமேற்றி வணங்கி வேண்டிக்கொள்ள, நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

ரிஷபம்

காலத்துக்குத் தகுந்தபடி சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசி, ராசிநாதனின் பார்வை பெறுவதும். சுகஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதும் உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எத்தனையோ முறை முயற்சி செய்தும் நடக்காத காரியம் இனி விரைவில் நடக்கத் துவங்கும். இதுவரையில் உங்கள் காதலைச் சொல்லத் தயங்கிய நீங்கள், துணிச்சல் வந்து சொல்லி விடுவீர்கள். திருமண காரியத்தில் சிலருக்கு முயற்சி இருக்கும். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் சேவை சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் கைகூடும். கலைத்துறையில் நல்ல மேம்பாடு அடைவீர்கள். மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். இடத்திற்கு தகுந்தபடி சில நேரம் உங்களின் சூழ்நிலையை மாற்றிக் கொண்டு செயற்படுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 09-01-2024 செவ்வாய் இரவு 08.19 முதல் 11-01-2024 வியாழன் இரவு 12.39 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எடுத்த காரியம் வெற்றி தரும்.

மிதுனம்

எதிர்காலத்திற்கு தகுந்த செயல்களை மேம்படுத்திக்கொள்ளும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ஏழாமிடத்தைப் பார்ப்பதால் உங்களின் திருமண முயற்சிகள் கைகூடும். விரும்பிய வரன் உங்களைத் தேடி வருவார். பொது வாழ்வில் உங்களின் சேவை பயனுள்ளதாக அமையும். கணவன் - மனைவி உறவு சில நேரம் சர்ச்சை தரும். தேவைகளை உணர்ந்து செயற்படுவது நல்லது. கலைத்துறையினர் புதிய தொழில் நுட்ப சேவை மூலம் பிரபலம் அடைவீர்கள். இதுவரை பல தரப்பட்ட பணிகளில் இருந்த குழப்பம் நீங்கி சுப பலன்களைப் பெறுவீர்கள். விளையாட்டுத் துறையிலும் உங்களின் போட்டித் நன்மை தரும். எதையும் சிந்திந்து செயற்படுவீர்கள். கவலையை மறந்து மனமகிழ்ச்சி கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். பெண்கள் முன்னேற்றம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 11-01-2024 வியாழன் இரவு 12.40 முதல் 14.01.2024 ஞாயிறு அதிகாலை 03.33 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை துர்க்கையம்மனையும் வழிபட்டு வர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.

கடகம்

வாழ்வை வளம் பெறச் செய்ய சிந்தித்து செயற்படும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் சந்திரன் அமர்வதால் பொருளாதாரத் தேவைக்கு பணவரவு இருக்கும். குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பது பணவரவுகளில் சில தடங்கல்கள் வந்தாலும் உங்களுக்கு தேவைக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளை தற்சமயம் தள்ளிப்போடுவது நல்லது. அரசியலில் உங்களிடம் வந்து உதவி கேட்டவர்கள் இன்று உங்களை விடச் சிறந்து விளங்க வேண்டுமென்று உங்களையே எதிர்த்து நிற்பார்கள். பொது வாழ்வில் வீரியத்தைக் காட்டிலும் விவேகமாக நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினர் சொந்த முயற்சி மூலம் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் முக்கிய காரியங்களை உடனே செய்து விடுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 14-01-2024 ஞாயிறு அதிகாலை 03.34 முதல் 16-04-2024 செவ்வாய் அதிகாலை 05.54 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, பச்சை, பல வர்ணங்கள்.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளிலும், ஞாயிறுகளிலும் ராகு காலத்தில் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் மூன்று ஏற்றி வணங்கி வர சகல காரியமும் நன்மை தரும்.

சிம்மம்

தனக்கென்று கொள்கையை வைத்து செயற்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும், சனி பார்வையும் இருப்பதுடன், ராசிநாதனுடன் யோகாதிபதி செவ்வாயும் லாபஸ்தானத்தைப் பார்ப்பது உங்களின் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். எதையும் நேரடியாகச் செய்ய முடியாவிட்டாலும் உங்களின் வசதிக்கு தொலைபேசி மூலம் காரியங்களைச் செய்துகொள்வீர்கள். நடப்பில் கண்டக சனி இருப்பதால் குரு பார்வையால் கஷ்டம் எதுவும் இல்லை. எனினும் உங்களின் உடல் நலனில் அடிக்கடி அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசியலில் சிலருக்கு நல்ல பதவி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். உறுதியுடன் செயற்பட்டு வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 16-01-2024 செவ்வாய் அதிகாலை 05.55 முதல் 18-01-2024 வியாழன் காலை 06.36 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரெஞ்சு, பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு 27 மிளகுகளை சிவப்புத் துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வர, சகல காரியமும் தடையின்றி சிறப்பாக நடக்கும்.

கன்னி

திட்டமிட்ட காரியங்களை எளிதில் செய்து முடிக்கும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் 3ஆம் பாதத்தில் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தைப் பார்ப்பதும் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதும் உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் மற்றும் ஆதாயமும் தரும். 

ஜென்ம கேதுவால் சில நேரம் ஞாபக மறதி வரும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். உங்கள் கடன் கோரிக்கை வங்கியில் நிறைவேறும் முன்னோர்கள் ஆசீர்வாதமும். பூர்வீக சொத்து சம்பந்தமான சில ஆவணங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும்.

சந்திராஷ்டம நாட்கள்: 18-01-2024 காலை 08.37 வியாழன் 20-01-2024 சனி பகல் 12.33 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெண்மை, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை நவக்கிரக குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வர பணப் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ளவும் வாய்ப்பு அமையும்.

துலாம்

தைரியமும் மனவலிமையும் கொண்டு விளங்கும் துலா ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கும். ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து நல்ல முயற்சிகளுக்கு முடிந்தவரை மேன்மை அடையச் செய்வார்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும். அரசியலில் உங்களின் செல்வாக்கு மேன்மை அடையும். 

உழைப்புக்கு முக்கியத்துவம் தந்து எதையும் எளிமையாகச் செய்ய யுக்திகளை கையாள்வீர்கள்.  தொழிற்சங்கப் பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். 

கலைத்துறையினர் பின்னடைவுகளை சரி செய்து விடுவீர்கள். எதிலும் ஏமாற்றமின்றி இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தேவை. திருமணத் தடை நீங்கி திருமண வாய்ப்பு அமையும். குடும்ப பாரத்தை இறக்கி வைத்து விட்டு எளிமையாகச் செயற்படத் துவங்குவீர்கள். யாரையும் மதிக்கப் பழகிக்கொள்வீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் அமைய உங்களின் முயற்சிகள் நன்மையைப் பெற்று தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: 20-01-2024 சனி பகல் 12.34 முதல் 22.01.2024 திங்கள் மாலை 06.29 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமை அம்மனையும் தீபமேற்றி வேண்டிக்கொள்ள சகல நன்மையும் உண்டாகும்.

விருச்சிகம்

துணிச்சலுடன் எதையும் செய்யத் துடிக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதால் தொழிலில் முன்னேற்றம் காண பல சிரமங்கள் அடைய வேண்டி வரும். திட்டமிட்ட செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். அதிக சுமைகளை ஏற்றிக்கொண்டு அவதிப்படாமல் எது முடியுமோ அதை மட்டும் செய்துகொண்டு மற்றதை விட்டு விடுங்கள். எதிர்ப்புகளை எதிர்கொண்டு செயற்படுவீர்கள். 

தொழிற்சங்கத்தின் பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு அடிக்கடி உடல் உபாதைகள் வந்து வருத்தம் உண்டாகும். பதவியும் பட்டமும் கிடைத்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சில இடையூறுகள் உண்டாகும். விளையாட்டுத்துறையில் காவல், இராணுவப் பணியில் சற்று கவனமுடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. 

சந்திராஷ்டம நாட்கள்: 22-01-2024 திங்கள் மாலை 06.30 முதல் 24-01-2024 புதன் இரவு 12.48 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்சு, சிவப்பு, வெள்ளை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை ராகு காலத்தில் 4.30 - 6.00 நவக்கிரக வழிபாடும், 9 நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வழிபட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நன்மை தரும்.

தனுசு

எதிலும் உறுதியுடன் செயற்பட்டு வெற்றி பெறும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் குரு உங்களின் ராசியைப் பார்ப்பதும், சனி மூன்றாமிடத்தில் யோக சனியாக அமர்வதும் உங்களின் சகல காரியமும், அனுகூலமாக அமைய வழிவகுக்கும். தொழிலில் முன்னேற்றம் பெறுவது, உத்தியோகத்தில் மேன்மை அடைவது, சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 

அரசியலில் நல்ல பதவியும் சிலருக்கு முக்கிய பொறுப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். கலைத்துறை அன்பர்களுக்கு நல்ல நிறுவனம் மூலம் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் மேலதிகாரி உங்களுக்குத் தனிப்பட்ட சலுகைகளைத் தந்து உடன் வைத்துக் கொள்வார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதார நிலை தாராளமாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள் : 24-01-2024 புதன் இரவு 02.49 முதல் 27-01-2024 சனி பகல் 01.27 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், நீலம், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள் : கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை இட்டு, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாக அமையும்.

மகரம்

திடமான நம்பிக்கையும் வளமும் கொண்ட மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியுடன் பாக்கியாதிபதி இணைவு பெறுவது சிறப்பான நற்பலன்களைப் பெற்றுத் தரும். தனஸ்தானத்தில் ராசியாதிபதி அமர்வதும் மறைவுஸ்தானாதிபதி சூரியன் பன்னிரண்டில் மறைவதும் ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பது போல, எதிர்பாராத சில அரசியல் மாற்றத்தால் உங்களுக்கு உயர்பதவி கிடைக்க வாய்ப்பு அமையும். 

தொழிலில் சிலருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுமையாக இருந்த சில காரியம் இனி எளிமையாக முடியும். புத்துணர்வுடன் செயற்பட்டு வெற்றி காண்பீர்கள். விளையாட்டுத்துறையிலும், கலைத்துறையிலும் உங்களின் சேவை சிறப்பாக அமையும். மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: 27-01-2024 சனி பகல் 1.20 முதல் 29-01-2024 திங்கள் அதிகாலை 1.09 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, புதன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியரையும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வழிபட்டு வர, எந்தக் காரியத்திலும் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்

தனக்குத் தெரிந்த விடயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஜென்மத்தில் அமர்வதால், லாபஸ்தானத்தில் சூரியனும், செவ்வாயும் அமர்வதால், தொழில் மேன்மை அடையும். பொருளாதார ஏற்றம் பெறுவீர்கள். சில காலமாக இழப்புகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி தேவை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு திருமணத் தடை நீங்கி திருமண காரியம் கைகூடும். 

அரசியலிலும், பொது வாழ்விலும் நேர்மையாக நடந்துகொண்டு மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்தி தனித்துவம் பெறும் வாய்ப்புகள் அமையும். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்: 

02-01-2024 செவ்வாய் மாலை 5.52 முதல் 05.01.2024 வெள்ளி அதிகாலை 4.53 மணி வரையும்.

29.01.2024 திங்கள் அதிகாலை 1.10 முதல் 01.02.2024 வியாழன் பகல் 12.17 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி முந்திரிமாலை போட்டு வேண்டிக்கொள்ள சகல நன்மைகளும் உண்டாகும்.

மீனம்

நினைத்ததை செயற்படுத்த எண்ணும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்வதால் பொருளாதாரத்தில் வளம் பெறுவீர்கள். முக்கிய கடமைகளை சரியாகச் செய்து மேன்மை அடைவீர்கள். ஆன்மீகத்தில் முன்னேற்றமும் தெளிவும் பெறுவீர்கள். சில ரகசியமான புதிய தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள். நடப்பில் சனி விரயத்தில் இருப்பதால் தேவையற்ற செலவுகளைத் தரும். 

எனவே, அவற்றை சுப விரயமாக ஆக்கிக்கொள்வது நல்லது. காணி வாங்குவது, வீடு கட்டுதல், திருமணம் செய்து வைத்தல் போன்ற சுபசெலவுகளைச் செய்வது நல்லது. 

இசைக் கலைஞர்களின் வாழ்க்கையில் வெளிநாடு செல்லும், வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். தாயார் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். யாரையும் நம்பி பிணையம் இடாமல் இருப்பது நல்லது. மின்சாரப் பொருட்கள் அடிக்கடி பழுது ஆகும். கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: 05-01-2024 வெள்ளி அதிகாலை 04.54 முதல் 07-01-2024 ஞாயிறு மாலை 7.48 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, புதன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 4.30 - 6.00 மணிக்குள் வைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபம் அகலில் ஏற்றி, எள் கலந்த அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள நன்மை உண்டாகும்.

(கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17