களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு, காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் தர்மீகன் சிவானந்தத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் பூதவுடல் இன்று மாலை காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் இழப்பால் காரைதீவு பிரதேசம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.

24 வயதாகும் தர்மீகன் சிவானந்தம் அடுத்த மாதம் நியுஸிலாந்து செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை துப்பாக்கிச்சூட்டில் தர்மீகன் சிவானந்தம், மற்றுமொரு பொலிஸ் அதிகாரி உட்பட 7 பேர் உயிரழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.