SLIM Effie விருதுகள் 2023 தங்க விருதினால் கௌரவிக்கப்பட்ட Lysol Sri Lanka

03 Jan, 2024 | 09:29 PM
image

Reckitt Benckiser நிறுவனத்தின் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் துப்புரவு மற்றும் கிருமிகொல்லி வர்த்தகநாமங்களில் ஒன்றான Lysol, மதிப்புமிக்க SLIM Effie Awards 2023 இல் அனைவராலும் விரும்பத்தக்க தங்க விருதை வென்றுள்ளது.

அந்நிகழ்வில் வழங்கப்பட்ட ஐந்து தங்க விருதுகளில் ஒன்றான இந்த பாராட்டானது, Lysol வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கிறது. இது துப்புரவு மற்றும் கிருமிகொல்லி தயாரிப்பு வகைகளில் நிறுவனத்தின் ஒப்பற்ற ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

Lysol Sri Lanka இனது விருது வென்ற பிரசாரத் திட்டமான ‘More than a floor’ (ஒரு தளத்திற்கும் அதிகமாக) ‘Home supplies & Services’ (வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் சேவைகள்) பிரிவில் தனித்துவத்தை பெறுகின்றது.

சுத்தமான மற்றும் பாதுகாப்பான வீடுகளை உருவாக்குவதன் மூலம், Lysol குடும்பங்களுக்கு கொண்டு வரும் பெறுமதியை மையமாகக் கொண்ட, அதன் அழுத்தமான கருத்தை விபரிப்பதன் மூலம் பார்வையாளர்களை அது கவர்ந்துள்ளது.

இலங்கையின் சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், ‘More than a Floor’ என்பது வெறுமனே ஒரு உற்பத்தி ஊக்குவிப்பு அம்சத்தையும் கடந்து, உணர்வுபூர்வமான மட்டத்தில் பார்வையாளர்களுடன் ஒன்றாக கலந்தது.

Reckitt Benckiser Lanka Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான தலைவர் ஷாமிந்த பெரேரா இது பற்றி குறிப்பிடுகையில், "சந்தையில் Lysol இன் ஆதிக்கமானது,அதன் தயாரிப்புகளின் தரத்தையும் கடந்து வெளிப்படுகின்றது.

நுகர்வோருடன் ஆழமான வகையில் இணையும் வர்த்தகநாமத்தின் திறனானது, அதன் சந்தைப்படுத்தல் தகவல் பரிமாற்ற தொடர்புகளுக்கு உந்துசக்தியாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த மதிப்புமிக்க விருதானது, இந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது." என்றார்.

சந்தைப்படுத்தல் துறையில் மிகவும் உலகளாவிய மதிப்புமிக்க பாராட்டுகளில் ஒன்றாக Effie விருதுகள் விளங்குகின்றன.

அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குகின்ற மற்றும் குறிப்பிட்ட சந்தைப்படுத்தல் நோக்கங்களை அடையும் பிரசாரங்களை அது கௌரவிக்கின்றது.

வெற்றிகரமான பிரசாரங்கள் நிரூபிக்கப்பட்ட, அளவிடக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், அப்பிரசாரத்தின் செயற்றிறனை வலியுறுத்துவதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருது நிகழ்வு புகழ் பெற்றுவிளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள 125 இற்கும் அதிக சந்தைகளில் 55 இற்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம், அனைத்து சந்தைகளிலும் ஒரே மாதிரியான இறுக்கமான அளவுகோல்களை தீர்ப்பு வழங்குவதற்காக Effie விருதுகள் பயன்படுத்துகின்றன. இதனால் Effie விருதை வெல்வதானது, உண்மையான உலகளாவிய சாதனையின் அடையாளமாக கருதப்படுகின்றது.

Reckitt Benckiser Lanka Ltd நிறுவனத்தின் தூய்மை தொடர்பான வர்த்தகநாம முகாமையாளரான, துஷினி ரணசிங்க இது பற்றி தெரிவிக்கையில், "இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது சந்தைப்படுத்தல் தொடர்பாடல் பங்காளிகளுக்கும், நாடு முழுவதிலும் உள்ள எமது விசுவாசமான நுகர்வோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பாக சவாலான காலங்களில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது." என்றார்.

புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு நிறுவனங்களான Phoenix Ogilvy (Pvt) Ltd, Geometry Global (Pvt) Ltd, Dentsu Grant Group ஆகியவற்றின் மூலம் இந்த விருது பெற்ற "More than a Floor" பிரசாரம் மேலும் உயிரூட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவுடன் இலங்கையில் அறிமுகமான கையடக்க...

2025-02-13 15:57:06
news-image

கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான செயலணி...

2025-02-13 13:03:25
news-image

சியெட் இலங்கையில் 10வது முதற்தர S-I-S...

2025-02-12 16:03:43
news-image

தேசிய மனநல நிறுவகத்தின் வாழ்வை பிரகாசமாக்குகின்ற...

2025-02-12 12:46:29
news-image

Acuity Partners ஐ முழுமையாக கையகப்படுத்தி,...

2025-02-12 12:33:05
news-image

எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக...

2025-02-11 18:03:15
news-image

MMBL மணி ட்ரான்ஸ்பர் பிரத்தியேக கிளையுடன்...

2025-02-11 17:50:42
news-image

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்தல்: வளர்ச்சியை...

2025-02-09 15:23:19
news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08