பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்தித்து பேச்சு

03 Jan, 2024 | 09:53 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பதவி காலத்தை நிறைவு செய்யவுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (02) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

நியூசிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்த இதுவரை காலமும் ஆற்றிய பங்களிப்புக்காக நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே நியூசிலாந்தில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகரும் இதன்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிடத்தக்க அளவு மீண்டுள்ளதாகவும் 3 வருடங்களுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு வருகை தந்த போது நாடு கொவிட் தொற்றால் முடக்கப்பட்டிருந்ததாகவும்  அந்த சந்தர்ப்பத்தில் தாம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்த நியூசிலாந்து உயர்தானிகர்,  தற்போதைய அரசாங்கம் நெருக்கடிகளை முறையாக முகாமைத்துவம் செய்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார். 

தாம் பதவியில் இருந்த காலப்பகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து சந்தர்ப்பங்களிலும்  பூரண ஒத்துழைப்புகளை வழங்கியதாகவும் இதன்போது அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கும் இலங்கை முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், கடன் மறுசீரமைப்பு,  வர்த்தகம்,முதலீடுகள்  மற்றும் தேர்தல் தொடர்பான திருத்தங்கள் சம்பந்தமாகவும் இதன்போது  இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-06-16 12:14:49
news-image

இசை நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் கூரிய...

2024-06-16 12:07:45
news-image

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில்...

2024-06-16 11:52:25
news-image

வாடகை வீட்டில் வசிப்போரிடமிருந்தும் வரி அறவிட...

2024-06-16 12:20:10
news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 12:06:06
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16