இன்றைய திகதியில் எம்மில் பலரும் கடும் முயற்சி செய்தாலும் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றத்தை அடைவதில்லை. இதற்கு நிழல் கிரகங்கள் என கூறப்படும் ராகு மற்றும் கேதுவின் கர்மாவை அந்த ஜாதகர் பெற்றிருப்பதே காரணமாகும். அதிலும் குறிப்பாக கேதுவின் கர்மாவை ஒரு ஜாதகர் பெற்றிருந்தால்... அவர்களது இல்லத்தில் சுப காரியங்கள் என்பது மிக மகிழ்ச்சியுடன் நடப்பதற்கான சூழலே இருந்திருக்காது. சிலரது ஜாதகத்தில் சுப காரியங்கள் நிகழ்ந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் மன வலியுடன் அது நடந்தேறியிருக்கும்.
இவர்களுக்கு கேதுவின் கர்மா தொடர்கிறது என உணர்ந்து கொள்ளலாம். கேதுவின் கர்மா என்பது கடந்த பிறவியில் நீங்கள் நிறைவேற்ற தவறிய கடமையை இப்பிறவியில் சுட்டிக்காட்டும் கிரகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் கேது எந்த ராசி கட்டத்தில் இருக்கிறாரோ.. அந்த ராசி கட்டத்துடன் தொடர்புடைய பாவகத்திற்கு கடந்த பிறவியில் அவர் செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறியிருப்பார்.
உங்களுடைய கடினமான காலகட்டத்தின் போது ஒரு ஜோதிடரை அணுகி விளக்கம் கேட்கும் போது.. உங்களுடைய ஜாதகம் கேதுவின் கர்மாவை கொண்டிருக்கிறது என குறிப்பிட்டால், நீங்கள் அதற்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும். சிலருக்கு அந்த பரிகாரத்தை செய்த பின்னரும் மன நிறைவு அல்லது மகிழ்ச்சி என்பது இருக்காது. ஏனெனில் உங்களுடைய கேதுவின் கர்மா என்பது வலிமையானது.
இதனை களைவதற்கு எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று தரிசித்தால்.. கேதுவின் கர்மா அகலும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அத்தகையதொரு ஆலயம் தான் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி எனும் சிறிய நகரத்தில் அமைய பெற்றிருக்கும் பவ ஔஷதீஸ்வரர் ஆலயம்.
இந்த ஆலயத்திற்கு உங்களது ஜென்ம நட்சத்திரம் தினத்தன்றோ அல்லது கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம் மூலம் ஆகிய நட்சத்திர தினத்தன்றோ அல்லது உங்களது ஒன்பதாம் அதிபதியின் நட்சத்திர தினத்தன்றோ சென்று இத்தல இறைவனை வழிபட்டு, மனமுருகி பிரார்த்தனை செய்தால்.. கேதுவின் கர்மா விலகி, உங்களது வாழ்வில், வசந்தமும் வளர்ச்சியும் ஏற்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM