மார்பகப் புற்றுநோய் பெரும்பாலும் பெண்களுக்கும் மட்டுமே ஏற்படும் என்பது எம்மில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், வயதான ஆண்களுக்கும் அல்லது எந்த வயதில் உள்ள ஆண்களுக்கும் மிக அரிதாக மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை தொடக்க நிலையில் கண்டறிவது மிக கடினம். ஏனெனில், ஆண்களின் மார்பகப் பகுதியில் புரதங்கள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டிருந்தால்.. அதனை அவர்கள் கைனக்கோமஸ்தியா என எண்ணுவர். ஆனால், இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட பல ஆண்களுக்கு மார்பு பகுதியிலிருந்து வலியுடன் கூடிய சீழ் வெளியேறும்போதுதான்.. அது புற்றுநோயின் பாதிப்பு என்பதனை அறிந்து, அதன் பிறகு மருத்துவ நிபுணர்களை நாடுவர்.
இதன்போது மருத்துவர்கள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை முறைகளை இத்தகைய ஆண்களுக்கும் பரிந்துரைப்பர். அதாவது திசு பரிசோதனை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் பெட் ஸ்கேன் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வர்.
இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு முதலில் சத்திர சிகிச்சையை செய்து அங்குள்ள புற்றுநோய் கட்டியை அகற்றுவர். அதனைத் தொடர்ந்து மார்பகத்தின் அருகிலுள்ள அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகளையும் ஆராய்ந்து அங்கும் சத்திர சிகிச்சைகளோ அல்லது கீமோ தெரபி சிகிச்சைகளோ அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளோ மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் அரிதானது என்றாலும், அவையும் கடுமையான பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் என்பதனை உணர்ந்து, அதற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சைகளை மேற்கொண்டு அத்தகைய பாதிப்பிலிருந்து நிவாரணத்தை பெற வேண்டும்.
- டொக்டர் கௌதமன்
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM