முதன்முறையாக இணையும் சத்யராஜ் - வெற்றி கூட்டணி

03 Jan, 2024 | 04:20 PM
image

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சத்யராஜும், வளரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான வெற்றியும் முதன் முதலாக பெயரிடப்படாத படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள். 

இப்படத்தின் தொடக்க விழா இன்று (03) சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்குபற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அறிமுக இயக்குநர் நரேந்திர மூர்த்தி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் சத்யராஜ் மற்றும் வெற்றி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிரார்த்தனா, ஐரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

ஆர். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார். டார்க் கொமெடி ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை சேகர் ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார் இளையராஜா சேகர் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. 

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right