இத்தாலியிலிருந்து ஹோமாகமை பிரதேசத்திலுள்ள முகவரி ஒன்றிற்கு விமான தபால் சேவை மூலம் உணவுப் பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட 6 கோடியே 13 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் போதைப்பொருள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பொதியானது சீதுவையில் உள்ள நிறுவனம் மூலம் விமான தபால் சேவை வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த பொதிகளை பெற்றுக்கொள்ள வந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொதியிலிருந்து 4 கிராம் 919 மில்லி கிராம் நிறையுடைய ஹேஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM