பேஸ்புக், வட்ஸ்அப் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண் போதைப்பொருள் பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே கடந்த வியாழக்கிழமை (டிச. 28) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, அவர் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணின் கணவரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதுடன், இப்பெண் மற்றுமொரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, இந்த போதைப்பொருள் வலையமைப்பினை நடாத்தி வருகிறார்.
இந்த பெண்ணின் போதைப்பொருள் வலைப்பின்னலானது பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் ஊடாக இடங்களை குறிப்பிட்டு, ஐஸ் மற்றும் இதர போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
விசேட போதைப்பொருள் ஒழிப்புக் குழுவொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என். ஜயபத்ம அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM