மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்மித் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டியில்  மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளைாயடியுள்ளார்.

ஸ்மித் 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1560 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 61 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை 33 இருபதுக்கு-20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.